Tirupati free darshan : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அமல்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறி இருந்தார். இதனையடுத்து தற்போது கொண்டு வரப்பட உள்ள புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைத்து வருகிறது புதிதாக துவங்கப்பட்ட ஸ்ரீவாணி டிரஸ்ட். The Sri Venkateswara Alaya Nirmanam trust (Srivani trust) இந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் என்பது தான் இந்த புதிய முறை.
சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையை அதிகரிக்க செய்யவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபல ஆங்கில செய்தித்தளத்திற்கு சுப்பா ரெட்டி கொடுத்திருக்கும் சிறப்பு பேட்டியில் திருப்பதியில் விஜபி தரிசனம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய வசதி.. இனிமேல் ஏழுமலையானை தரிசிப்பது மிக மிக சுலபம்!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். இதுக் குறித்து முழு தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
1. திருப்பதியில் இதற்கு முன்பு விஜபி தரிசனம் L1 L2 L3 என்ற முறையில் இருந்தது பக்தர்களுக்கு தெரிந்த ஒன்று. இதற்கு 500 ரூ முதல் 1500 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது ஆனால் இனிமே அப்படி இல்லை. அனைத்து பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.
2. முன்பு போன்று நீங்க காத்திருந்த ஏழுமலையானை தரிசிக்கும் காலம் சென்று அதிக நேரம் காத்திருக்காமல் எளிதில் சாமியை தரிசனம் செய்ய டைம் ஸ்லாட் போட்ட அட்டை நேற்று முன்தினம் முதல் சோதனையில் தொடங்கப்பட்டு உள்ளது.
3. டைம் ஸ்லாட் முறையிலான தரிசன அனுமதியை பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்களார் அட்டை இவை இரண்டில் ஏதாவது ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்கிறது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்.
4. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம் என கூற முடியாது என்பதால், தற்போது வாக்களர் அட்டை இருந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கில் சோதனை முறையில் இந்த திட்டம் நடை முறையில் உள்ளது