Advertisment

கொலாஜன் உற்பத்திக்கு தக்காளியின் வைட்டமின் சி.. இப்படி யூஸ் பண்ணுங்க

தக்காளி சருமத்தில் உள்ள நச்சுகளை அகற்றி, முகப்பரு வராமல் தடுக்கிறது.

author-image
abhisudha
New Update
Tomato face packs

Tomato face packs for clear skin

வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே 1 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய தக்காளி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

Advertisment

தக்காளி உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது, அவற்றின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் அழுக்குகளை அகற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கும். மேலும் அவை டேனை நீக்கி, வெயிலின் தாக்கத்தை ஆற்றும்.

தக்காளி, தேன் ஃபேஸ் பேக்

publive-image

தக்காளி மற்றும் தேன் பேக் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளியில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்கிறது.

தேன் மற்றும் தக்காளியின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தின் இயற்கையான pH அளவை பராமரிக்கிறது.

எப்படி செய்வது?

ஒரு மசித்த தக்காளியை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலக்கவும். அதை உங்கள் முகம் முழுவதும் மசாஜ் செய்து உலர விடவும். சிறிது நேரம் கழித்து கழுவவும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்யுங்கள்

தக்காளி, எலுமிச்சை ஃபேஸ் பேக்

publive-image

இந்த இரண்டுமே இயற்கையான கிளென்சராக செயல்படுகிறது. அவை சருமத்தில் உள்ள நச்சுகளை அகற்றி, முகப்பரு வராமல் தடுக்கிறது. இவை இணைந்து சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்கி பளபளப்பாக்கும்.

எப்படி செய்வது?

இந்த பேக் செய்ய நீங்கள் தக்காளியை பிசைந்து சாறு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். பேஸ்ட்டில் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவலாம். அதை அப்படியே விட்டு சில நிமிடங்கள் உலர விடவும். அது காய்ந்ததும் தண்ணீரில் கழுவவும்.

அழகான, பளப்பான முகத்துக்கு உங்கள் வீட்டிலிருக்கும் தக்காளியில் இந்த குறிப்புகளை டிரை பண்ணி பாருங்க..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment