Advertisment

பிரிட்ஜில வைக்கலனா ரெண்டு நாள் தாங்காது.. தக்காளி விலை உயர்வு வைரல் மீம்ஸ்!

தக்காளி விலை உயர்வு, நெட்டீசன்கள் இடையே வேடிக்கையான மீம்களுக்கு தீவனமாக மாறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tomato price Memes

Tomato price hike across Tamilnadu; Here are some hilarious meme

சென்ன உட்பட தமிழகத்தில் பிற பகுதிகளில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சென்னையில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 1,200 டன் தக்காளி தேவைப்படுகிறது. ஆனால் இப்போது 700 டன் அளவிற்கே தக்காளி வரத்து உள்ளது.

அத்துடன் கோடை காலம் என்பதால், வெளி மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இன்றைய காலை நிலவரப்படி கோயேம்பேடு சந்தையில் பெங்களூரு தக்காளி கிலோ ரூ. 70க்கும், நாட்டுத் தக்காளி ரூ. 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் சில்லறை விற்பனையில் பெங்களூரு தக்காளி கிலோ ரூ.85க்கும், நாட்டுத் தக்காளி ரூ. 70க்கும் விற்பனையாகிறது.

மேலும் பீன்ஸ், காலிஃபிளாவர் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு தற்போது 'தக்காளி விளைச்சல் இல்லாததே காரணம்.’ அடுத்த இரு வாரங்களுக்கு இன்னும் தக்காளி விலை அதிகமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, தக்காளி விலை உயர்வு, நெட்டீசன்கள்  இடையே வேடிக்கையான மீம்களுக்கு தீவனமாக மாறியுள்ளது.

இங்கே பாருங்கள்!

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment