Advertisment

வீட்டில் நிறைய தக்காளி இருக்கா? உடனே இந்த சூப் வச்சிடுங்க...

இந்த சூப் செய்ய 10 நிமிடம் போதும். உடம்புக்கு தேவையான அனைத்து ஆரோக்கியமும் இந்த சூப் மூலம் கிடைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tomato soup recipe tomato soup tamil ,

tomato soup recipe tomato soup tamil ,

Tomato soup recipe tomato soup tamil : தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. 10 நிமிடத்தில் மிக மிக எளிமையாக செய்யக் கூடிய இந்த சூப்பில் ஆரோக்கியமான பல சத்துக்கள் உள்ளன.

Advertisment

பொதுவாகவே சூப் என்றவுடன், குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் என்று தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தக்காளி சூப் சாப்பிடுவதற்கும் மிக மிக அருமையாக இருக்கும். கூட வீட்டில் கார்ன் இருந்தால் அதை பொரித்து சூப் மேல் போட்டு கொடுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம்னு சொல்ல மாட்டார்கள்.

tomato soup tamil : செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கடாயில் வெண்ணெய்யை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

மார்னிங் டிபன் சிக்கன் கறி வித் இட்லி… இப்படி செஞ்சி பாருங்க!

பின்னர் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பின்னர் கால் லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.

மிதமான தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும். பிறகு 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த தக்காளி சூப் தயார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment