30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்

20 வயதுகளின் இறுதியில் நீங்கள் இருக்கிறீர்களா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் தான் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர்

சுற்றுலாவுக்கும், வயதிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழலாம். ஒரு காலத்தில் குடும்ப பொறுப்புகள், அலுவலகப் பொறுப்புகள் ஆகியவற்றை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலை இருந்து வந்தது.
தற்போது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் தனிநபருக்கான பொறுப்புகள் என்பது அதிகரித்து விட்டது.

இதனால் ஒருவர் தனக்காக தேவையை உணர்ந்து, அதற்கு மதிப்பளிக்க எண்ணும் போது அவருக்கு வயது 30 ஆகிவிடுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் 30 என்பது உயர்வைத் தரும் வயதாக அமைகிறது.

எனவே அவர்களுக்கு மனதை ஆசுவாசப்படுத்தவும், அமைதிக் கொள்ளவும் தேவை எழுகிறது. இதற்கு பலரும் தேர்ந்தெடுக்கும் தீர்வு தான் சுற்றுலா. 30 வயதை நெருங்குவோருக்கு சுற்றுலா ஒரு தவம் என்றே சொல்லலாம்.
ஆகவே 30 வயதை நெருங்குபவர்கள், அல்லது அந்த வயதில் இருப்பவர்கள் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

கொல்கத்தா

நவராத்திரி தினம் அன்று கொல்கத்தா விழாக் கோலம் பூண்டும். வங்காளத்தின் கலாச்சாரத்தை இந்த பண்டிகை கொண்டிருக்கும். துர்கா பூஜைக்காக கொல்கத்தா பெண்கள் வெள்ளை உடை உடுத்தி, அம்மாநிலத்தையே அதிரவைப்பார்கள். இந்த நிகழ்வு உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ஸ்ரீநகர்

20 வயதுகளின் இறுதியில் நீங்கள் இருக்கிறீர்களா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் தான் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர்.

பூமியில் இருக்கும் சொர்க்கமாக கருதப்படுகிறது ஸ்ரீநகர். இந்தியாவில் பழமையானதும், பல புதுமையான கட்டமைப்புகள் ஒருங்கே பெற்றுள்ளது இந்நகரம்.

கோவா

இந்தியாவில் எப்போது பரபரப்பாய் இருக்கும் கடற்கரைகளை உள்ளடக்கிய மாநிலம் கோவா. போர்த்துகீசிய கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாகவும் இது திகழ்கிறது. இரவுக் கொண்டாட்டங்கள், மது வகைகள், கடற்கரை சுற்றுலா, கண்கவர் நிகழ்வுகள் என வாழ்வில் மறக்க முடியாத இன்பங்களை தன்னுள் அடக்கியுள்ளது.

காசி

30 வயதை எட்டுவதற்குள் பார்க்க வேண்டிய இடங்களில் காசிக்கும் முக்கிய பங்குள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் வாரணாசி ஆரத்தி திருவிழா, படகு சவாரி, திருத்தலங்கள் என மனிதமும் ஆன்மிகமும் சங்கமிக்கும் இடம் தான் காசி.

அந்தமான்

அழகிய கடற்கரைகளை கொண்ட பகுதி தான் அந்தமான். நீச்சல் தெரியாமல் இருப்பவர்கள், தண்ணீரைக்கண்டால் அச்சப்படுபவர்கள் ஆகியோருக்கு புதிய அனுபவத்தை தருவதற்காக இயற்கை உருவாக்கிய இடம் தான் அந்தமான்.

அதன் ஆழ்கடல் வனப்பு, காண்போரை பரவசமடையச் செய்யும். ஒருமுறை சென்றுவிட்டால், மீண்டும் வரத்தூண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close