இனோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட்ஸ் எடிஷன் இன்று அறிமுகம்!

இந்த டூரிங் ஸ்போர்ட்ஸ் எடிஷன் தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மெக்கானிக்கலாக காரில் எந்த மாற்றமும் இல்லை.

இதுகுறித்து விகடன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘Venturer’ எனும் பெயரில் இந்தோனேஷியாவில் விற்பனையாகும் இனோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட்ஸ் எடிஷனை, டொயோட்டோ நிறுவனம் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. வழக்கமான இனோவோ க்ரிஸ்டாவுடன் ஒப்பிடும்போது, இந்த டூரிங் ஸ்போர்ட்ஸ் எடிஷன் தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மெக்கானிக்கலாக காரில் எந்த மாற்றமும் இல்லை.

காரின் வெளிப்புறத்தில், முன்பக்க – பின்பக்க பம்பர், சைடு ஸ்கர்ட்ஸ், வீல் ஆர்ச்களில், க்ரோம் உடனான கறுப்பு நிற பாடி க்ளோனிங் இடம்பெற்றுள்ளது. அதோடு க்ரில், ரியர்வியூ மிரர் போன்ற பல இடங்களில் க்ரோம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 16 இன்ச் அலாய் வீல் (205/65 R16) கறுப்பு நிறத்துக்கு மாறியுள்ளன. காரின் உட்புறத்தில் 6 சீட்களில் கருப்பு லெதர் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.

இதனுடன், ஸ்பெஷலான ஃப்ளோர் மேட்டும் உண்டு. ஸZX எனும் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காரின் இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், ‘Wine Red’ – ‘Super White’ எனும் இரு புதிய கலர் ஆப்ஷன்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வழக்கமான இனோவாவுடன் ஒப்பிடும் போது, இந்த டூரிங் ஸ்போர்ட் எடிஷனின் விலை, சுமார் 60 – 80 ஆயிரம் அதிகமாம்.

×Close
×Close