Advertisment

சருமம் வறண்டு எரிச்சலாக உணர்கிறதா? 4 கிச்சன் பொருட்கள் போதும்.. நீங்களே இந்த பேஸ் மாஸ்க் செய்யலாம்!

வறண்ட மற்றும் சென்சிட்டிவான சருமத்தை ஆற்றுவதற்கு, 4 வீட்டுப் பொருட்களை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கக் கூடிய ஃபேஸ் மாஸ்க்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Facemask

Try these natural home remedies face mask for healthy skin

ஏறக்குறைய நாம் அனைவரும் ஒவ்வொரு வகையான தோல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்.  குறிப்பாக சில காலநிலை, வானிலை மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடுகள் தோல் வறட்சியை மேலும் மோசமாக்கும்.

Advertisment

உங்கள் சருமத்தை ஆற்றவும், அதை மேம்படுத்தவும் விரைவான வழி உங்களுக்குத் தேவைப்படும்போது, உடனடி மருத்துவ கவனிப்பு அல்லது தோல் மருத்துவ சிகிச்சை எப்போதும் அணுக முடியாததாக இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில், நமது சமையலறைகள், நமது சருமப் பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பொருட்களின் பொக்கிஷமாக இருக்கும்.

வறண்ட சருமத்திற்கு வீட்டில் தயாரிக்கப்படும் பேஸ் மாஸ்க்!

பிரபல தோல் மருத்துவரான டாக்டர். சித்ரா வறண்ட மற்றும் சென்சிட்டிவான சருமத்தை ஆற்றுவதற்கு 4 வீட்டுப் பொருட்களைக் கொண்டு, நீங்களே தயாரிக்கக் கூடிய ஒருஃபேஸ் மாஸ்க் பற்றி கூறுகிறார்.

வறட்சி, சென்சிட்டிவிட்டி, ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துடன் நமது சருமத்தை அமைதிப்படுத்துவதற்கான அற்புதமான ஹேக் இதோ!

* தேன், வெண்ணெய், பால் மற்றும் ஓட்ஸ் ஆகிய 4 பொருட்களும் -  இந்திய சமையலறைகளில் எளிதாகக் கிடைக்கும்.

* ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், பாதி அவகேடோ பழம், ஒரு டேபிள் ஸ்பூன் பால் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்க்கவும்.

* எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, கலவையை 15 நிமிடங்கள் விடவும் ஊறவைக்கவும். பின்னர் சுத்தமான முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து அதை கழுவவும்.

இந்த மாஸ்க்-இல் பல நன்மைகள் உள்ளன. தேன் சருமத்திற்கு மாய்ஸ்சரைஸர் அளித்து அதை ஈரப்பதமாக்குகிறது. அவகடோ பழம் சருமத்தை மென்மையாக்குகிறது, அதே நேரத்தில் அதிக வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்களுடன் ஆழமாக ஊட்டமளிக்கிறது. பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் வீக்கத்தைக் குறைக்கிறது, மேலும் ஓட்ஸில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன, அவை தோல் எரிச்சலைத் தணிக்கும்.

ஒருவேளை உங்களிடம் அவகடோ அல்லது வெண்ணெய் பழம் இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக நீங்கள் அவகடோ எண்ணெயை பயன்படுத்தலாம்.

சிகிச்சை அளிக்கப்படாத வறண்ட சருமம் பிக்மண்டேஷனுக்கு வழிவகுக்கும். செராமைடுகள், வைட்டமின் ஈ மற்றும் ஹைலூரோனிக் அமிலம் கொண்ட தினசரி மாய்ஸ்சரைசர்; தோல் பிரச்சனைகளை சரிசெய்து, சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? வறண்ட சருமத்திற்கு நீங்களே தயாரித்து பயன்படுத்தக்கூடிய இந்த பேஸ் மாஸ்க்-ஐ முயற்சிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment