துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து… சுகர் பிரச்னை தீர இப்படி ட்ரை பண்ணுங்க!

Tulsi leaves for diabetes how to use basil to manage blood sugar levels Tamil News இது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.

Tulsi leaves for diabetes how to use basil to manage blood sugar levels Tamil News
Tulsi leaves for diabetes how to use basil to manage blood sugar levels Tamil News

Tulsi leaves for diabetes how to use basil to manage blood sugar levels Tamil News : இந்தியப் பூர்வீக மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் குறிப்பிடத்தக்கப் பகுதியாக அறியப்படும் ஒரு மூலிகைதான் துளசி. இதன் இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் உண்ணக்கூடியவை மற்றும் எண்ணற்ற இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. துளசி இலை, உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், உணவின் பண்புகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது.

துளசி, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும். பழங்காலத்திலிருந்தே இது ஒரு பிரபலமான மூலிகையாக இருந்தாலும், நீரிழிவு நோயை சிறப்பாகத் துளசி நிர்வகிக்கும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு நோய் ஒரு முக்கிய வாழ்க்கை முறை நோய். இது நாட்டில் பரவலாக உள்ளது. உடலில் ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் இது குறிக்கப்படுகிறது. பெரும்பாலான சுகாதார வல்லுநர்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை துளசி உறுதிப்படுத்துவதாக உறுதியளிக்கின்றனர்.

துளசி இலைகள் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் பண்புகளால் நிறைந்துள்ளன. மிகவும் பொதுவான சில நோய்களைத் தடுப்பதிலிருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது வரை – துளசியின் நன்மைகள் பலதரப்பட்டவை. இந்த மூலிகை, கணைய பீட்டா செல் செயல்பாடு மற்றும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது. மேலும், தசை செல்கள் மூலம் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மேலும் அதிகரிக்கிறது.

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் டைப்-2 உள்ள 60 பேரை ஈடுபடுத்தினர். அவர்கள் சோதனை முழுவதும் தங்கள் வழக்கமான மருந்துகளைத் தொடர்ந்தனர். பாதி பேர், 90 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 250mg காப்ஸ்யூல் துளசி எடுத்துக் கொண்டனர். துளசி மற்றும் வழக்கமான மருந்துகளை உட்கொள்பவர்களில் குளுக்கோஸ் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டன. சாப்பிட்ட பிறகு ரத்த குளுக்கோஸ் அளவுகளில் கூர்முனை கணிசமாக மேம்பட்டது. துளசி இலைகளில் ரத்தச் சர்க்கரைக் குறைவு பண்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை இயற்கையாகக் கட்டுப்படுத்த துளசி இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒவ்வொரு நாளும் சில துளசி இலைகளை மெல்லலாம். அதிலிருந்து அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

கொதிக்கும் நீரில் சில இலைகளைச் சேர்த்து சிறிது துளசி தேநீர் தயாரிக்கலாம். சுமார் இரண்டு-மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீரை வடிகட்டி ஒவ்வொரு நாளும் ஒரு கப் குடிக்கவும்.

சில துளசி இலைகளைத் தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் விட்டுவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் முதலில் துளசி நீரை குடிக்கவும்.

இந்த மூலிகையிலிருந்து அனைத்து நன்மைகளையும் பிரித்தெடுக்க உங்கள் உணவுகளில் துளசி இலைகளைச் சேர்க்கவும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இந்த முறைக்கு மாறுவதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tulsi leaves for diabetes how to use basil to manage blood sugar levels tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com