Advertisment

அதிக மஞ்சள் அதீத ஆபத்து… இம்யூனிட்டிக்கு இவ்ளோதான் எடுத்துக்கணும்!

ஏற்கனவே இரத்த சோகை, இரத்தப்போக்கு கோளாறு, சிறுநீரக கற்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை கூடுதலாக தங்கள் உணவில் சேர்க்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
turmeric, turmeric benefits, turmeric tea benefits, turmeric side effect, 20 benefits of turmeric, மஞ்சள், மஞ்சள் பலன்கள், அதிகப்படியான மஞ்சள் பயன்பாட்டால் பலன்கள், அதிக மஞ்சள் உட்கொல்வது ஆபத்து, turmeric uses, how to take turmeric for inflammation, too much turmeric intake lead to risk, more turmeric lead to side effects, turmeric on face, turmeric

மக்கள் உணவில் பயன்படுத்தும் மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் என்று கூறுவதால் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் பல அதீத ஆபத்துகள் ஏற்படும். அதனால், மஞ்சளை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisment

இந்தியாவில் மஞ்சள் உணவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலா பொருள் ஆகும். இது கறிகளில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. உணவில் மஞ்சள் சேர்ப்பதால் உணவில் மஞ்சள் நிறத்தையும் சூடான சுவையையும் தருகிறது. ஆசிய கண்டத்தில் மஞ்சள் பல்வேறு தரப்பினராலும் உணவில் பயன்படுத்தப்படுவதோடு, பல நூற்றாண்டுகளாக சுகாதார நலன்களில் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக, அதன் பயன்பாடு கொரோனா தொற்று பரவல் அலைகளின் போது அதிக புகழ் பெற்றது.

மஞ்சள் தொற்றுநோயைக் குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது. மஞ்சள் வேர் ஊறுகாய் முதல் மஞ்சள் தூள் வரை பிரபலமானது. இதனால், மஞ்சள் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் வெகுவாக அதிகரித்தது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் தெரிந்தது என்னவென்றால், மஞ்சள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஒரு பெரிய பிரச்னையாக மாறும். அது பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதுதான்.

உண்மையில் மஞ்சள் வீக்கத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால், அதிகமாக இது உடலில் இரும்பு சத்தை குறைக்கும். இரும்பு சத்து என்பது ஒரு கனிமமாகும். இது ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய நம் உடலுக்கு தினசரி தேவைப்படுகிறது. இது இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு பொறுப்பான சிவப்பு புரதமாகவும் இருக்கிறது.

மஞ்சள் உணவில் உட்கொள்வதைப் பொறுத்து இரும்புச் சத்து உறிஞ்சுதலை 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைக்கக் கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சளின் ஸ்டோச்சியோமெட்ரிக் குணங்கள் காரணமாக இது நடக்கிறது. மஞ்சள் அனைத்து உறிஞ்சக்கூடிய இரும்பையும் பிணைக்க உதவுகிறது. அதோடு இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மஞ்சள் நிறத்தில் முக்கிய செயலில் உள்ள குர்குமின், ஃபெரிக் இரும்பை பிணைத்து ஃபெரிக்-குர்குமின் வளாகத்தை உருவாக்குகிறது. இந்த கலவை உடலில் இரும்பு சமநிலைக்கு காரணமான ஹெப்சிடின், பெப்டைட்களின் தொகுப்பையும் தடுக்கலாம். இந்த காரணிகள் அனைத்தும் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

நீங்கள் அதை மிதமாக எடுத்துக் கொண்டால், மஞ்சள் உங்கள் ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் உதவ முடியும். நீங்கள் எப்போதும் செய்வது போல உங்கள் கறிகளிலும் காய்கறிகளிலும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கொஞ்சம் அதிகமாக கூடுதலகா எடுத்துக்கொள்ளும்போத், குர்குமின் சப்ளிமெண்ட்ஸ் அல்லது மஞ்சள் திரவமாக எடுக்கத் தொடங்கும் போது சிக்கல் தொடங்குகிறது.

அளவுக்கு அதிகமான மஞ்சள் எடுத்துக்கொள்வது இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துவதோடு அதிக குர்குமின் எடுத்துக்கொள்வது செரிமான பிரச்சினைகள், தலைவலி மற்றும் தோல் வெடிப்பு ஆகியவற்றிற்கும் வழிவகுக்கும். மஞ்சளை அதிகமாக உட்கொள்வது கல்லீரலின் அளவை அதிகரிக்கும். வயிற்றுப் புண், வீக்கம் ஆகியவற்றை அதிகரிக்கும், குடல் அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு அதிக வாய்ப்புள்ளது.

மஞ்சளில் குர்குமின் மிக முக்கியமான செயலில் உள்ள கலவை ஆகும். இதுதான் அதன் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாகும். ஆனால், குர்குமின் கூடுதலாக உட்கொள்ளுவது அனைவருக்கும் பரிந்துரைக்கப்படவில்லை. ஏற்கனவே இரத்த சோகை, இரத்தப்போக்கு கோளாறு, சிறுநீரக கற்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை கூடுதலாக தங்கள் உணவில் சேர்க்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Food Tips Healthy Food Tamil News 2 Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment