ulundhu kali recipe in tamil: தொன்மையான உணவு கலாச்சாரத்தில் நம்முடைய கலாச்சாரத்திற்கு என தனி இடம் உண்டு. அந்த வகையில், நம்முடைய உணவு கலாச்சாரத்தில் களி முக்கிய ஊட்டச்சத்து உணவாக இருக்கிறது. களி சாப்பிடும் பழக்கம் நகரங்களில் முற்றிலும் மறைந்தாலும், கிராமத்தில் வாசிக்கும் மக்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இந்த களிகளில் கேப்பைக் களி, உளுத்தங்களி, வெந்தயக் களி என்று 3 வகை உள்ளது.
இதில் நாம் பார்க்கவுள்ள உளுத்தங்களியில், கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. இவற்றை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண் குழந்தைகள் போன்றோருக்கு மிகவும் ஏற்றதாக இவை உள்ளன. மேலும், இவை முதுகு வலியை நீக்குவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.
இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியுள்ள உளுத்தங்களியில் கருப்பட்டி சேர்த்து சுவையான களி செய்வது எப்படி? என்று இங்கு காணலாம்.

உளுந்தங் களி செய்யத் தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு மாவு (நன்கு அரைத்தது) – 6 கைப்பிடி
கருப்பட்டி – தேவையான அளவு
தேங்காய் – துருவியது
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
அரிசிமாவு – சிறிதளவு
ஏலக்காய் – 4 கிராம்
வறுத்த பாசி பருப்பு – சிறிதளவு

உளுந்தங் களி சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பின்னர், அவற்றை கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிளறவும்.
பிறகு, உளுந்து மாவு சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பின் ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான உளுந்தங்களி தயார். அவற்றை நீங்கள் சுவைத்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“