ஓட்டல்களாக மாறிய பிரம்மாண்ட அரண்மனைகள்: இங்கு செல்வதற்கு மிஸ் பண்ணிடாதீங்க

வரலாற்று சான்றுகளாக எஞ்சியிருக்கும் கட்டடங்கள், அரண்மனைகள் ஆகியவை இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நவீன கலை ஆகியவற்றுக்கு சான்றாக உள்ளன.

இந்தியா ஒரு பெரும் கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் சொந்தமானது. வரலாற்று சான்றுகளாக எஞ்சியிருக்கும் கட்டடங்கள், அரண்மனைகள் ஆகியவை இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நவீன கலை ஆகியவற்றுக்கு சான்றாக உள்ளன.

இந்தியாவில் அப்படி நிச்சயம் நாம் செல்லவேண்டிய இடங்கள் அரண்மனை உணவகங்கள். இந்தியாவில் நூற்றாண்டுகளை கடந்து தன் அழகை இழக்காமல் இருக்கும் ஒவ்வொரு அரண்மனை உணவகங்களுக்கும் பின்னால், அந்த நகரத்தின், ஆண்ட மன்னர் பரம்பரையின் கதை இருக்கும். அப்படி சிறந்த அரண்மனை உணவகங்கள் சிலவற்றை காண்போம்.

தாஜ் ஏரி அரண்மனை:

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இந்த அரண்மனை உள்ளது. பிச்சோலா ஏரிக்கரையில் அமைந்துள்ள இந்த அரண்மனை ‘பிச்சோலா ஏரி அரண்மனை’ என்றும் அழைக்கப்படுகிறது. மகாராணா இரண்டாம் ஜகத் சிங்கின் வழிகாட்டுதலின்படி, 1743-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனை ஓட்டல், 83 பிரம்மாண்ட அறைகளை கொண்டது.

உமைத் பவான் அரண்மனை, ஜோத்பூர்:

இந்த அரண்மனையும் ராஜஸ்தானில் அமைந்துள்ளது. ரத்தோர் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டபோது, மன்னர் உமைத் சிங் இந்த அரண்மனை ஓட்டலை எழுப்பினார். அதன்மூலம், பல விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. மேற்கத்திய மற்றும் இந்திய கட்டடக்கலை நுட்பங்கள் மூலம் கட்டப்பட்டுள்ளது இந்த உமைத் பவான் அரண்மனை ஓட்டல்.

ராஜ்வாடா அரண்மனை, நாக்பூர்:

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் அமைந்துள்ள இந்த அரண்மனை ஸ்ரீ ஜித்தேந்திர ரத்தோர் மற்றும் ஸ்ரீ திலீப் சிங் ரத்தோர் ஆகியோரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில்தான் மன்னர் குடும்பத்தினர் வாழ்ந்துவந்தனர். அதன்பின்பு, இந்த அரண்மனை உணவகமாக மாற்றப்பட்டது. இதில், 90 பிரம்மாண்ட அறைகள், 4 சிறிய கூட்டறைகளும், 5 கூட்டறைகளும் உள்ளன.

ஷிவ் நிவாஸ் அரண்மனை, உதய்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள ஷிவ் நிவாஸ் அரணமனை, மகாராணா ஃபத்தே சிங்கால் கட்டப்பட்டது. இதில், 40 பிரம்மாண்ட அறைகள் உள்ளன.

ராம்பக் அரண்மனை, ஜெய்ப்பூர்:

1835-ல் மன்னர் சவாய் மதோ சிங், தன் மகன் ராம் சிங் மற்றும் பணியாளர்கள் வேட்டைக்கு சென்றுவிட்டு ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்ட அரண்மனைதான் இது. தற்போது இது உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

×Close
×Close