Advertisment

அக்குள் கருமை நீங்க எலுமிச்சை யூஸ் பண்ணலாமா? தோல் மருத்துவர் பதில்

எலுமிச்சை சாற்றை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தோல் மருத்துவர் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஷரத் விளக்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Is lemon a ‘healthy alternative’ for deodorant?

கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சில டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் சருமம் கருமையாவதற்கும் வழிவகுக்கும்.

Advertisment

ஷேவிங், பிளக்கிங் மற்றும் வாக்சிங் போன்ற காரணங்களால் கூட அக்குளில் கருமை வரலாம். இதனால் ஸ்லீவ்லெஸ் உடை அணிய சிலருக்கு அசௌகர்யமாக இருக்கலாம். வீட்டிலேயே, எந்தவித கெமிக்கலும் இல்லாமல் அக்குள் கருமையை எவ்வாறு நீக்குவது? இப்படி பல வீடியோக்களை நீங்கள் இணையத்தில் பார்க்கலாம்.

எலுமிச்சையை, அக்குள் கருமையை நீக்க சிறந்த தீர்வாக பலரும் பரிந்துரைக்கின்றனர். சமீபத்தில் கூட ஒரு இதுபற்றிய இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவின் படி அதன் நன்மைகள் என்ன? 

* பாக்டீரியா மற்றும் துர்நாற்றத்தை அழிக்கிறது

* செய்ய எளிதானது

*சுற்று சூழலுக்கு இணக்கமானது!

அதை எப்படி பயன்படுத்துவது?

- வாரத்திற்கு மூன்று முறை வரை

–கொஞ்சம் தேய்த்து, 10 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் அக்குள்களை குளிர்ந்த நீரில் கழுவி, உலர்த்தி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

எலுமிச்சையின் அமிலத்தன்மை அக்குள் இருண்ட பகுதியை ஒளிரச் செய்து, தோலின் மேற்பரப்பில் இருந்து இறந்த செல்களை நீக்கி, தோலை எக்ஸ்ஃபாலியேட் செய்யும்.

இந்த ஹேக் உண்மையில் வேலை செய்கிறதா?

எலுமிச்சை சாறு சிட்ரிக் அமிலத்தால் ஆனது, இது AHA அல்லது ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம். சருமத்தில் AHA நன்மைகள் இருந்தாலும், எலுமிச்சை சாற்றை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தோல் மருத்துவர் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஷரத் விளக்கினார்.

publive-image

அக்குள் கருமை நீங்க எலுமிச்சை யூஸ் பண்ணலாமா?

அதிலிருந்து பெறப்பட்ட சிட்ரிக் அமிலம் தோலின் pH க்கு ஏற்றவாறு ஒரு கலவையாக மாற்றியமைக்கப்படலாம். மனித தோலின் pH 4.5 முதல் 5.5 வரை உள்ளது, அதாவது அது சற்று அமிலமானது. எலுமிச்சை சாறு அதிக அமிலத்தன்மை கொண்டது, இது pH 2 மற்றும் 3 க்கு இடையில் உள்ளது.

இந்த அதிக அமிலத்தன்மை உங்கள் சருமத்தின் இயற்கையான pH ஐ மாற்றி, எரிச்சல், தோல் உரிவது, வறண்டு போவது, சிவத்தல் மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றைப் பயன்படுத்தும்போது தோலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் கொப்புளங்கள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் நிரந்தர வடுவை ஏற்படுத்தலாம், என்று டாக்டர் ஜெய்ஸ்ரீ கூறினார்.

அவரது கூற்றுப்படி, எலுமிச்சை சாற்றில் ஃபுரோகூமரின்கள் எனப்படும் கலவைகள் உள்ளன, அவை உங்கள் தோலில் உள்ளவை உட்பட டிஎன்ஏவுடன் தொடர்பு கொள்ளும் திறனைக் கொண்டுள்ளன.

எலுமிச்சை சாறு உங்கள் சருமத்தை சூரிய ஒளிக்கு சென்சிட்டிவாக உணர வைக்கிறது. இது கடுமையான வெயில் போன்ற சந்தர்ப்பங்களில் சொறி, எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

அக்குள் தோல் உணர்திறன் வாய்ந்தது மற்றும் நல்லதை விட சேதத்திற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, எலுமிச்சை சாற்றை குறிப்பாக அக்குள்களில் தடவுவதைத் தவிர்ப்பது நல்லது, என்று டாக்டர் ஜெய்ஸ்ரீ கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment