Advertisment

Kitchen Tips: உங்கள் பல கிச்சன் பிரச்சனைகளை தீர்க்கும் டீ பேக்ஸ்.. எப்படி பயன்படுத்துவது?

பழைய டீ பேக்ஸ் மீண்டும் பயன்படுத்துவதற்கும், அதிலிருந்து அதிகப் பயன் பெறுவதற்கும் சில வழிகள் இங்கே!

author-image
WebDesk
New Update
Kitchen Tips

Use tea bags in this way to reduces your kitchen works

சூடான தேநீரை ருசித்த பிறகு உங்களுக்குப் பிடித்த டீ பேக்குகளை  தூக்கி போடுவீர்களா? அப்படியானால் நீங்கள் அதை நிறுத்தி, இதை படிக்க வேண்டும்! நம்மில் பெரும்பாலோர் தேநீர் காய்ச்ச உடனேயே டீ பேக்குகளை குப்பையில் வீசுகிறோம், ஆனால் இந்த டீ பேக்ஸ் அதைவிட அதிகமான விஷயங்களுக்கு பயன்படும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

Advertisment

பழைய டீ பேக்ஸ் மீண்டும் பயன்படுத்துவதற்கும், அதிலிருந்து அதிகப் பயன் பெறுவதற்கும் சில வழிகள் இங்கே!

பாத்திரங்களில் இருந்து கிரீஸ் நீக்க

தட்டுகள், பானை மற்றும் பழமையான பாத்திரங்களில் இருந்து பிடிவாதமான கிரீஸை அகற்றுவதற்கு டீ பேக்ஸ் சிறந்தவை. பழைய டீ பேக்குகளுடன்’ சூடான நீரில் பாத்திரங்களை ஊற வைக்கவும். சில மணிநேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, லிக்வைட் டிஷ்வாஷிங் சோப்புடன் நன்றாகக் கழுவவும். தேநீரில் உள்ள கலவைகள் இயற்கையாகவே கறை மற்றும் எண்ணெய் கிரீஸை அகற்ற உதவுகிறது.

குக்டாப் மற்றும் மைக்ரோவேவை சுத்தம் செய்ய

உங்கள் தேநீரை காய்ச்சிய உடனேயே, ஒரு கடாயை எடுத்து, பயன்படுத்திய டீ பேக்குகளை ஊற வைக்கவும். கலவை அறை வெப்பநிலையை அடைந்ததும், அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில், ஒரு துளி எலுமிச்சை சாறுடன் சேர்க்கவும்.

இந்த கலவையுடன் மேற்பரப்புகளை சுத்தம் செய்யலாம். குக் டாப் அல்லது ஸ்லாப் அல்லது கண்ணாடி மேசைகளில், ஒரு துணி அல்லது கிச்சன் டவலைப் பயன்படுத்தி மேற்பரப்பைச் சுத்தம் செய்யவும். சிறந்த முடிவுகளுக்கு, பயன்படுத்திய டீ பேக்ஸின் சூடான கலவையைப் பயன்படுத்தவும்.

இறைச்சியை மென்மையாக்குங்கள்

இறைச்சி சமைக்க திட்டமிட்டுள்ளீர்கள், உங்கள் சமையல் நேரத்தை குறைக்க வேண்டுமா? இந்த ஹேக் உங்களுக்கு உதவும்! பிளாக் டீ கலவையில் இறைச்சியை மரைனேட் செய்யவும். தேநீரில் டானிஸ் இருப்பது இறைச்சியை மென்மையாக்கவும், சமைக்கும் நேரத்தை குறைக்கவும் உதவும்.

கலவையை உருவாக்க, ஒரு பெரிய கிண்ணத்தில் சிறிது சூடான நீரை சேர்த்து, பயன்படுத்திய டீ பேக்குகளை வைக்கவும். ஃபிளேவர் வெளிவந்தவுடன் இறைச்சியை ஊற வைக்கவும்.

வாசனை அதிகரிக்க

தேநீர் காய்ச்ச உடனேயே, டீ பேக்ஸை வெட்டி, ஒரு தட்டில் வெயிலில் உலர வைக்கவும். வீட்டைச் சுற்றியுள்ள துர்நாற்றம் அல்லது வாசனையைக் குறைக்க இந்த நறுமண தேயிலை இலைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த நொறுக்கிய உலர்ந்த இலைகளை’ உங்கள் நறுமண எண்ணெய்களில் சேர்க்கலாம். சமையலறை மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள எந்த துர்நாற்றத்தையும் சரிசெய்ய, புதினா, இலவங்கப்பட்டை, லமன்கிராஸ் போன்ற தேயிலை இலைகள் சரியானவை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment