Advertisment

வீட்டில் மஞ்சள் இருக்கும்போது எதற்கு அழகு சாதனப்பொருட்கள்?

மஞ்சள் இந்திய சமையலறையில் மட்டுமே பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த பொருள். அதனால் தான், எந்த சமையலாக இருந்தாலும், மஞ்சள் தூளை பயன்படுத்துகின்றனர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Effective ayurvedic mosquito repellents

Effective ayurvedic mosquito repellents

மஞ்சள் இந்திய சமையலறையில் மட்டுமே பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த பொருள். அதனால் தான், எந்த சமையலாக இருந்தாலும், மஞ்சள் தூளை சிறிதளாவகவேனும் தூவுவதை வழக்கமாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக தென்னிந்திய சமையலில் மஞ்சளுக்கென தனி இடம் உண்டு. அஞ்சறைப்பெட்டியில் மஞ்சள் தூள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். உடல் அழற்சியை தடுத்தல், காயங்களுக்கு மருந்தாகுதல், ஆண்ட்டி ஆக்ஸிடண்டாக செயல்படுதல், தீக்காயங்களால் ஏற்பட்ட புண்களை மெல்ல மறைக்கும் குணம் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். சமையலில் மசாலா பொருட்களின் மன்னன் என்றுகூட மஞ்சளை அழைக்கலாம். அவ்வளவு மருத்துவ குணங்கள் அதில் நிறைந்துள்ளன.

Advertisment

www.soultree.in நிறுவனர் விஷால் பந்தாரி மற்றும் beautysource.in, நிறுவனர், ராகினி மேஹ்ரா மஞ்சளின் நற்குணங்களை பட்டியலிட்டுள்ளனர். அவற்றை காண்போம்.

1. உடலில் ஏற்பட்டுள்ள காயங்களால் நோய்த்தொற்று ஏற்படாமலும், பாக்டீரியா தாக்குதல் ஏற்படாமலும் தடுக்க மஞ்சள் பயன்படுகிறது. காயங்களில் தொற்று ஏற்பட்டு அதனால் அழுகிய நிலை ஏற்படாமலும் மஞ்சளால் தடுக்க முடியும்.

2. உடலில் உள்ள செல்களில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் தன்மை மஞ்சளில் உள்ள மஞ்சளகத்திற்கு உள்ளதால், இளமைப்பொலிவுடன் எப்பொதும் இருக்க முடியும். இளம் வயதிலேயே முகத்தில் வறட்சி, தோல் சுருக்கம் ஏற்படுவதை இதனால் தடுக்க முடியும்.

3. பருக்கள், வெடிப்புகள் மட்டுமல்லாமல், முகத்தில் ஏற்படும் பள்ளங்கள், உடலில் ஆங்காங்கே சிவப்பு திட்டுகள் ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் மஞ்சளுக்கு உள்ளது.

4. எண்ணெய் முகம் உள்ளவர்கள் மஞ்சளை பயன்படுத்தினால், அவர்களுக்கு எண்ணெய் சுரப்பு குறைந்து முகம் பொலிவு பெறும்.

5. தோல் விரைவில் தளர்ந்துவிடாமல் தடுப்பதன் மூலம் இளமையுடன் காட்சியளிக்க முடியும்.

6. மஞ்சள் மூலம் வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம்.

மஞ்சள் மூலம் வீட்டிலேயே ஃபேஸ் ஸ்க்ரப் செய்வது எப்படி?

சிறிதளவு மஞ்சளை பால் அல்லது யோகர்ட்டில் சேர்த்து கலவையாக கலந்துகொண்டு அதனை முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், கரும்புள்ளிகள், தளர்வுகள் மறையும். முகம் மென்மையாகும்.முகத்தில் காணப்படும் துளைகளும் மறைந்து சமமாக காட்சியளிக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment