Advertisment

காலையிலயே சுட சுட ஊத்தப்பம்... கூடவே வடைக்கறி வெற லெவல் போங்க!

ஊத்தப்பம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர டிபன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
uttapam recipe in tamil uttapam recipes

uttapam recipe in tamil uttapam recipes

uttapam recipe in tamil uttapam recipes : 1 கப் அரிசி இருந்தால் போதும். வித்தியாசமான இந்த ஊத்தப்பம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்! எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

Advertisment

ஊத்தப்பம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர டிபன்.

தேவையான பொருட்கள்:

ரவை- 1 கப்

புளித்த தயிர்- 1/2 கப்

வெங்காயம்- 1

தக்காளி- 1

கேரட்- 1

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

ரவை ஊத்தப்பம் செய்ய முதலில் மாவு தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு அகலமான கிண்ணத்தில் ஒரு கப் ரவை, சிறிதளவு உப்பு மற்றும் 1/2 கப் புளித்த தயிர் சேர்த்து கிளறவும். பிறகு இதனை பத்து நிமிடங்களுக்கு மூடி வைத்து விடவும்.

ரவை தயிரில் பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு மீண்டும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும். ஊத்தப்பம் செய்ய மாவு தயாராக உள்ளது. இதனை ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஊற்றலாம். ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக விரிக்கவும்.

ஊத்தப்பம் குண்டாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கேரட், கொத்தமல்லி தழை ஆகியவற்றை தூவவும். ஊத்தப்பத்தை சுற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொள்ளுங்கள். ஒரு பக்கம் வெந்த பின் மற்றொரு பக்கம் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment