Advertisment

மீந்துபோன தோசை மாவில் சூப்பரான மெதுவடை: சிம்பிள் செய்முறை

Instant Vada with Dosa Batter in tamil: உங்கள் வீட்டில் மீந்துபோன தோசை மாவை வேஸ்ட் செய்யாமல் இங்கு வழங்கப்பட்டுள்ள சிம்பிள் டிப்ஸ் மூலம் சுவையான மெதுவடை செய்து ருசிக்கவும்.

author-image
WebDesk
New Update
Vada recipes in tamil: Vada making with leftover dosa or idly batter in tamil

Instant Vada recipe with Idli / Dosa Batter tamil: பருவ மழை தொடங்கியுள்ள இந்த காலக் கட்டத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்பதுண்டு. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள். இவர்களுக்கு நமக்கு தெரிந்ததையே அடிக்கடி செய்து கொடுப்பது நிச்சயம் போர் அடிக்கும். எனவே தான் உங்களுக்காக ஈஸியான ஒரு ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம்.

Advertisment

இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 10 நிமிடங்கள் போதும். அப்படி என்ன ரெசிபி என்றால், தின்னத் தின்னத் திகட்டாத மீந்துபோன தோசை மாவில் செய்த மெதுவடை தான் அது.

சரி இப்போது அந்த சுவைமிகுந்த மெதுவடை எப்படி தயார் செய்யலாம் என்று பாப்போம்.

மீந்துபோன தோசை மாவில் மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்:-

பிரட் துண்டுகள் - 3 (பிரட் துண்டை உதிர்த்து மிக்சியில் இட்டு அரைத்து கொள்ளவும்)

ரவை - 1/2 கப்

மீந்துபோன தோசை மாவு - 1 கப்

இஞ்சி - பொடியாக நறுக்கியது

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

கருவேப்பிலை, கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது

உப்பு - தேவையான அளவு

மீந்துபோன தோசை மாவில் மெதுவடை ஈஸி செய்முறை:-

முதலில் மிக்சியில் இட்டு அரைத்த பிரட் துண்டை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அவற்றுடன் ரவை மற்றும் மீந்துபோன தோசை மாவு சேர்க்கவும்.

பிறகு பொடியக நறுக்கிய இஞ்சி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

அவற்றுடன் மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து வடை மாவில் வடை தட்டி பொரித்து எடுக்கவும்.

நீங்கள் தயார் செய்துள்ள இந்த அற்புதமான வடையுடன் தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த சட்னிகளுடன் சுவைத்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthly Life Tasty Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment