Advertisment

உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க ‘வலிமை’ ஹீரோயின் சொல்லும் அழகு குறிப்புகள் இதோ!

இணையத்தில் கிடைக்கும் பல தோல் பராமரிப்பு ஆலோசனைகளால் நீங்கள் குழப்பமடைந்தால், ஹுமா குரேஷி சொல்லும் இந்த எளிய மற்றும் பயனுள்ள ‘சுய பராமரிப்பு’ வழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

author-image
WebDesk
New Update
huma qureshi skin care tips

Valimai movie heroine huma qureshi skin care tips

சத்தான காலை உணவு மற்றும் உடற்பயிற்சியைத் தவிர, தூக்கத்தால் தூண்டப்படும் பஃபினெஸை குறைக்க, அர்ப்பணிப்புள்ள காலை தோல் பராமரிப்பு வழக்கத்தின் வடிவில், நீங்கள் சில சுய-கவனிப்புகளில் ஈடுபட வேண்டும்.

Advertisment

ஆனால், இணையத்தில் கிடைக்கும் பல தோல் பராமரிப்பு ஆலோசனைகளால் நீங்கள் குழப்பமடைந்தால், ஹுமா குரேஷி சொல்லும் இந்த எளிய மற்றும் பயனுள்ள ‘சுய பராமரிப்பு’ வழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

இன்ஸ்டாகிராமில், ஹூமா சமீபத்தில் தினசரி தான் செய்யும் சில 'சுய பாதுகாப்பு' முறைகளை கூறினார். இங்கே பாருங்கள்.

ஜேட் ரோலர் (Jade roller)

ஹூமா’ கழுத்து, கன்னங்கள் மற்றும் நெற்றியில் ஜேட் ரோலரைப் பயன்படுத்தி தனது வழக்கத்தைத் தொடங்குகிறார். ஜேட் ரோலர் நச்சு நீக்கவும், சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை வராமல் தடுக்கவும், தசை அழுதத்தை போக்கவும் மற்றும் மேற்புற தோல் பராமரிப்பை மேம்படுத்தவும் அறியப்படுகின்றன. மாய்ஸ்சரைசர் அல்லது சீரம் தடவிய பிறகு, அதன்மீது ஜேட் ரோலரைப் பயன்படுத்துவது தயாரிப்பு ஆழமாக ஊடுருவ உதவுகிறது.

மேட்சா டீ ஐ பேட்ச் (Matcha tea eye patch)

அடுத்து, நடிகை தனது கண் பைகளுக்கு மேட்சா டீ ஐ பேட்ச்களைப் பயன்படுத்துகிறார்.

கருப்பு/க்ரீன் டீ பேக்ஸ்’ அல்லது கோல்ட் கம்ப்ரஸ் பயன்படுத்துவதன் மூலம் இரத்த நாளங்கள் விரிவடைதல், கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம்.

ஃபேஷியல் ஆயில் (Facial oil)

பிறகு, ஹூமா, தனக்குப் பிடித்த ஃபேஷியல் ஆயிலை தாராளமாக முகத்தில் தடவுகிறார். பல்வேறு வாசனைகளில் வரும் ஃபேஷியல் ஆயில்’ உங்கள் சருமத்தை ப்ளம்பி ஆக வைத்திருக்க உதவுகிறது, வயதான தோல் மற்றும் வறட்சியைத் தடுக்கிறது.

ஃபேஸ் மசாஜ்

ஃபேஷியல் ஆயிலுக்கு பிறகு, ஹூமா’ முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக மசாஜ் செய்கிறார். தோல் நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்தத்தை உறிஞ்சுவதற்கு எந்தவொரு அழகு பொருளையும் பயன்படுத்திய பிறகு, உங்கள் விரல்களை கொண்டு உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரத்த ஓட்டம்’ முகத்திற்கு ஆக்ஸிஜனின் ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment