விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வனிதாவுக்கு, தற்போது சினிமாவிலும், சின்னத்திரையிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
வனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் அடிக்கடி தன்னுடைய சமையல், அவுட்டிங், பியூட்டி டிப்ஸ், மூவி ஷூட்டிங் விலாக் என பல வீடியோக்களை பதிவிடுவார்…
விஜய் டி.வி,யில் பிக்பாஸ் சீசன் 7, அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் வனிதா மகள் ஜோவிகா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
பிபி வீட்டில் இளம் போட்டியாளராக இருக்கும் ஜோவிகா ஆரம்பம் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்…
இந்நிலையில், வனிதா தனது இளைய மகள் ஜெய்நிதா உடன் தாய்லாந்து நாட்டுக்கு டூர் சென்றுள்ளார். அங்கு பெங்காக் நகரில் பிரபலமான சட்டுசக் (chatuchak) மார்கெட், Jodd Fairs, சீனா டவுன் ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்கள் மற்றும் வீடியோஸை வனிதா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்…
இங்கே பாருங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“