ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா போதும்; சத்தான சுவையான சாதம் 10 நிமிஷத்துல ரெடி…!

Karuveppilai saatham in tamil: பல வித நன்மைகளை உள்ளடக்கியுள்ள கறிவேப்பிலையில் எப்படி சாதம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்…

Variety Rice Tamil News: simple steps to make Curry Leaves Rice in Tamil

Variety Rice Tamil News: கறி இலை அல்லது கறிவேப்பிலை என அழைக்கப்படும் இந்த சத்து மிகுந்த இலையில் ஏராளமான நன்மைகள் நிரம்பியுள்ளன. இவற்றில் உள்ள விட்டமின்கள் முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றையை மேம்படுத்துகிறது. அதே வேளையில் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை குணப்படுத்தவும் கறிவேப்பிலை நமக்கு உதவுகிறது.

இப்படி பல வித நன்மைகளை உள்ளடக்கியுள்ள கறிவேப்பிலையில் எப்படி சாதம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்…

கறிவேப்பிலை சாதம் செய்யத் தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 1 கப்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
மிளகு – 8
எள் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4 எண்
பெருங்காயம் (அ) அசாஃபோடிடா தூள் – 1/4 தேக்கரண்டி
புளி – சிறிய துண்டு

சமையலுக்கு

சமைத்த அரிசி – 1 கிண்ணம்
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு 2 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 1/2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, 1 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி வெந்தயம் 8 மிளகு, 1/2 தேக்கரண்டி எள், 4 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். பின்னர் 1/4 தேக்கரண்டி பெருங்காயம் (அ) அசாஃபோடிடா தூள், சிறிய துண்டு புளி மற்றும் 1 கப் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.

இவை நன்கு ஆறிய பிறகு அவற்றை ஒரு மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

இப்போது, மற்றொரு பாத்திரம் எடுத்து அதில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, 1/2 தேக்கரண்டி கடுகு, 2 டீஸ்பூன் வேர்க்கடலை 2 காய்ந்த மிளகாய் இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு வறுக்கவும்.

பிறகு சமைத்து வைத்துள்ள சாதத்தை அவற்றி கொட்டி சேர்க்கவும். அவற்றோடு முன்னர் அரைத்து வைத்துள்ள பொடியையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த ஊட்டச்சத்து மிகுந்த கருவேப்பிலை சாதம் தயாராக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Variety rice tamil news simple steps to make curry leaves rice in tamil

Next Story
அலைபாயுதே மாதவன் அண்ணி.. சினிமா சீரியலில் மோஸ்ட் வான்டட் அம்மா.. மகராசி சீரியல் செண்பகம் பயோகிராபி!sri ranjani
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express