விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு சீசனுமே எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற தவறுதில்லை.
ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும் போதும், இம்முறை போட்டிக்கு யாரெல்லாம் வருவார்கள் என்பதில் தொடங்கி, தங்களுக்கு பிடித்தவர்களுக்காக சோஷியல் மீடியாவில் ஆர்மிக்கள் ஆரம்பித்து, அவர்கள் வெற்றி வாகை சூடுவதை பார்க்கும்வரை’ ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர்.
முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி, அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், பல பல யூடியூபர்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் இலவசமாக கன்டென்ட் கொடுத்து அவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தி வருகிறது.
அப்படி பார்க்கும் போது’ பிக்பாஸ் சீசன் 5, ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு உணர்வைக் கொடுத்தது. மற்ற 4 சீசன்களை போல காதல், அன்பு கேங், பாய்ஸ் கேங் என இல்லாமல் இந்த சீசன் தனித்துவமாக இருந்தது.
பிக்பாஸ் சீசன் 5இல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் தான் வருண், இவர் மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன். ஐசரி வேலன் நிறைய எம்.ஜி.ஆர் படங்களில் நடித்துள்ளார், அரசியல்வாதியும் கூட.
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது வருண்-அக்ஷ்ரா நட்பு, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருந்தது. ஃபிரீஸ்க் டாஸ்கின் போது, வீட்டுக்குள் வந்த வருண் அம்மாவும், அதை பெருமையுடன் இருவரிடமும் சொன்னார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் இருவரும் அடிக்கடி வெளியே சந்திப்பதை, புகைப்படங்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்றனர்.
அப்படி சமீபத்தில், அக்ஷ்ராவும், வருணும் சில தினங்களுக்கு முன் அவுட்டிங் சென்றுள்ளனர். அப்போது இரவில், ஒரு சாலையில் அக்ஷ்ரா தலையில், வருண் விளையாட்டாக தன் கையில் வைத்திருந்த கலரிங்கை அடித்துவிட்டார். இது அக்ஷ்ராவின் கார் மீதும் சிதறி கறை அப்படியே படிந்து விட்டது.
இப்போது அக்ஷ்ரா அதை வீடியோவாக எடுத்து, பாருங்க! என் முடி சூப்பரா கிரீன் கலர்ல இருக்கு.. ஆனா, நான் ஹேர் கலரிங்லாம் பண்ணல, எனக்கு வீணாப்போன ஃபிரெண்ட் இருக்கான். அவன் பேரு வருண். அவன் ஒருநாள் என்னை வாக்கிங் போலாம்னு கூட்டிட்டு போயிட்டு, கலரை தன் மீது வீசும் வீடியோவை அக்ஷ்ரா காட்டுகிறார். இந்த கலர் எத்தனைவாட்டி கழுவினாலும் போகமாட்டுக்கு என்று அக்ஷ்ரா பேசும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவ நீங்களும் பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“