Vatha kulambu recipe, vatha kulambu in tamil : சுண்டக்காயில் புரதம் , கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. வத்தக் குழம்பு என்றாலே நினைவுக்கு வருவது சுண்டைக்காயும், மணத்தக்காளியும்தான்.சுண்டைக்காய் வற்றல் குழம்பு தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்று.
வத்தக் குழம்பு செய்யும்போது தனியாக வறுத்து அரைத்து செய்வதைக் காட்டிலும் இப்படி பொடியை மொத்தமாக அரைத்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்
காய்ந்த மிளகாய் – 2,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.
செய்முறை :
* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும்.
* அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால்… அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.