Vegetable Tamil News: ஊட்டச்சத்து நிபுணர் Pooja Makhija சமீபத்தில் ஒரு பச்சையான காய்கறி ஜீஸ் செய்முறையை Facebook Live session ல் தெரிவித்தார். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு அல்லாமல் சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்கிறது.
இது வெயில் காலத்துக்கு ஏதுவான ஒரு குளிர்ச்சியான ஜூஸ். இதை வீட்டு சமயலறையில் உள்ள பொருட்களை வைத்தே தயாரிக்கலாம்.
இதன் செய்முறையை பார்க்கலாம்
பச்சை காய்கறி ஜூஸ்
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய்
காரட்
பீட்ரூட்
பச்சை மிளகாய்
தக்காளி
தண்ணீர்
எலுமிச்சை
Use nutrition as your best defense against hairloss and best aid for long, shiny, thick manes!
Nourish | Pooja Makhija यांनी वर पोस्ट केले रविवार, २८ जून, २०२०
செய்முறை
அனைத்து தேவையான பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அதை நன்றாக வடிகட்டி, ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதை அப்படியே குடிக்க வேண்டும்.
வெள்ளரி குளிர்ச்சியை தரும், காரட்டில் beta carotene உள்ளது. பீட்ரூட்டில் இரும்பு சத்து உள்ளது, தக்காளியில் lycopene மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இதோடு பச்சை மிளகாயையும் சேர்க்கும் போது வைட்டமின் ஈ சத்தும் கிடைக்கிறது. இந்த ஜூஸ் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் இந்த பச்சை காய்கறி சாறு முழுமையாக வைட்டமின் மற்றும் இரும்பு சத்துள்ள ஒரு கலவையாகும். இது தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு சிறந்தது என Makhija தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Skin care hairfall healthy hairimmunity against hairfall immunity boosters
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?