செட்டிநாடு ஸ்பெஷல் ’கேன்டிட் காஷ்யு’ ரெசிபியை நீங்களும் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கால் டம்ளர் தண்ணீர்
250 கிராம் முந்திரி பருப்பு
250 கிராம் சர்க்கரை
ஏலக்காய் பொடி
1 கிராம் குங்குமப் பூ
அரை ஸ்பூன் அரிசி மாவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். மிதமான தீயில் சர்க்கரை கரைய வேண்டும். 20 நிமிடங்கள் வரை நாம் கிண்ட வேண்டும். கொஞ்சம் ஏலக்காய்தூள் குங்குமப் பூ சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஒரு கம்பி பதம் மற்றும் அதன் அடுத்த பதத்திற்கு வர வேண்டும். சர்க்கரை பாகு சின்ன பந்து போல உருட்டும் பதம் கிடைக்க வேண்டும். தொடர்ந்து முந்திரியை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து அரிசி மாவு சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“