இதுபோன்று நடந்தால் நமது வீடு கூட ஆபத்தானது தான்!

மலேசியாவில் பூட்டிக் கிடந்த வீடு ஒன்றிற்குள், மிகப் பெரிய ராஜநாகம் ஒன்று புகும் வீடியோ வெளியாகி அனைவரையும் உச்சக்கட்ட பீதிக்கு உள்ளாக்கியுள்ளது. பீதி வீடியோவால் அல்ல… அந்த ராஜ நாகத்தால் தான்.

இந்த வீடியோ கடந்த 18-ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. இதுவரை 4.5 மில்லியன் பேர் இதனைப் பார்த்துள்ளனர். 45,000 பேர் இந்த வீடியோ ஷேர் செய்திருக்கின்றனர். சமூக தளங்களில் தற்போது திகில் வைரல் இதுதான்.

இதுல என்ன ஒரு விஷயம்னா, அந்த பாம்பை பிடிக்க மீட்புக் குழுவினர் வந்து வீடு முழுக்க அலசிவிட்டனர். எங்கு தேடியும் பாம்பு சிக்கவில்லை. பயபுள்ள பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக எஸ்கேப் ஆகிடுச்சு. இதுபோன்று ஒரு பாம்பு நம் வீட்டிற்குள் வந்தால்…. நினைச்சுப் பார்க்கவே பயமாயிருக்கே! இந்த செய்தியை பதிவிடும் போதே என் கால்களுக்கு கீழே நான் இருமுறை பார்த்துவிட்டேன். அம்புட்டு பீதி. அப்டியே மெதுவா குனிந்து உங்க காலுக்கு கீழே பாருங்க…..!

×Close
×Close