தண்ணீருக்குள் நடனம்... உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண்!

நம் கண்களில் வரும் குளுமை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது

ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் தண்ணீருக்குள் 5 நிமிடங்கள் தொடர்ந்து நடனம ஆடும் வீடியோ உலகளவில் வைரலாகி வருகிறது.

நடனக்கலை என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம் என்பார்கள். அந்த நடனத்தை வேறு வடிவத்திற்கு கொண்டு செல்வது தான் இந்த ஜப்பான் பெண்னின் முயற்சி.

கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் உலகளவில் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களையும் பிரமிக்க வைத்துள்ளது. சாதரணமாக நம்மால் 1 நிமிடம் தண்ணீருக்குள் மூச்சு பிடித்து இருக்க சொன்னாலே தெறித்து ஒடிவிடுவோம். ஆனால் கிட்டத்தட்ட 5 நிமிடம் இந்த பெண் மூச்சை பிடித்துக் கொண்டு தண்ணீருக்குள்ளே நடனத்தையும் ஆடி திகைக்க வைத்துள்ளார்.

இசையுடன் சேர்ந்த இந்த நடனத்தை பார்க்கும் போது நம் கண்களில் வரும் குளுமை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது. ஃபேஸ்புக்கில் மட்டும் இந்த வீடியோவை இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close