Advertisment

விஜய் டிவி செலிபிரிட்டிஸ் உடன் வலிமை படம் பார்க்க போன அறந்தாங்கி நிஷா.. என்ன ஆச்சுனு தெரியுமா?

விஜய் டிவி செலிபிரிட்டிகளுடன் இணைந்து விஆர் மாலுக்கு வலிமை படம் பார்க்க போகும் போது அங்கு நடந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்து, தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் நிஷா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aranthangi nisha,

விஜய் டிவி செலிபிரிட்டிஸ் உடன் வலிமை படம் பார்க்க போன அறந்தாங்கி நிஷா.. என்ன ஆச்சுனு தெரியுமா?

அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.

Advertisment

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.

இப்போது நிஷா விஜய் டிவியின் ஃபேமஸ் சீரியல் பாரதி கண்ணம்மாவிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் நிஷா தனது கருப்பு ரோஜா யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவி செலிபிரிட்டிகளுடன் இணைந்து விஆர் மாலுக்கு வலிமை படம் பார்க்க போகும் போது அங்கு நடந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்து, தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் நிஷா.  தியேட்டருக்கு போய், சீட்டில் உட்கார்ந்து’ வலிமை படம் வேற லெவல்ல இருக்குனு சொல்லி, காலுக்கு கீழே காட்டுகிறார். கீழே ஒரே திண்பண்டங்களாக வாங்கி வைத்திருக்கிறார்.

சரத் மனைவி கிருத்திகா, மைனா, அர்ச்சனா, அர்ச்சனா மகள் சாரா, ஆசார் எல்லாரும் ஒன்றாக சென்றுதான் வலிமை பார்த்துள்ளனர். அப்போது அர்ச்சனா நாங்க இங்க வந்ததுக்கு முக்கியமான காரணம் அசார் தான். கலக்க போவது யாரு ஷூட் போது, அக்கா நாளைக்கு வலிமை, நாம போறோம் கா.. என சொல்ல’ அசார், தல படத்துக்கு கூட்டிட்டு வந்துருக்கேன் நானு என சொல்கிறார்.

படம் பார்த்துவிட்டு எக்ஸ்கலேட்டரில் வரும் போது வீடியோ எடுப்பதை நிறுத்தவில்லை. படம் எப்படி இருந்தது என யோகி நிஷாவிடம் கேட்க, அவர் அல்வா மாதிரி இருந்தது. அஜித் சார் ரொம்ப அழகா இருந்தாரு. அதுவும் அந்த பைக் ரேசிங்லாம் அள்ளுச்சு போ என சொல்கிறார்.

பிறகு நிஷாவுக்கு மேக்கப் கிட் வாங்கி கொடுப்பதற்காக, நிஷா, மைனா, கிருத்திகா அங்குள்ள ஒரு கடைக்கு செல்கின்றனர். மைனா நிஷாவுக்கு மேக்கப் டெஸ்ட் செய்ய, யோகியும், கிருத்திகாவும் கலாய்த்து தள்ளுகின்றனர்.

இப்படி பல கோட்டிங் போட்டு, கடைசியில் எப்படியோ நிஷாவுக்கு மேக்கப் போட்டு விடுகின்றனர். பிறகு நிஷா அங்கு வேலை பார்க்கும் பையனிடம் ஒவ்வொரு பொருளாக எடுத்து, இது என்ன இது என்ன என கேட்க, அதற்கு கிருத்திகா, கவுண்டர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி, கார் பார்க்கிங் வந்து அங்கேயும் ஒரு அலப்பறை செய்துவிட்டு இந்த கேங் கிளம்பியது. இந்த வீடியோ இப்போது யூடியூபில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment