Advertisment

சின்ன ரோல்... தொகுப்பாளினி... சீரியல் ஹீரோயின் : விஜய் டிவி ஜாக்குலின்

பிறரை கலாய்த்தும், தன்னை கலாய்ப்பதற்கு அசட்டுத்தனமாக சிரிப்பதும் என செம ஜாலியாக அந்நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jacqueline

Vijay TV Jacqueline : புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.

Advertisment

பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை பிரபல படுத்திய பெருமையும் விஜய் டிவி-யையே சேரும். அந்த வகையில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்த வி.ஜே-வாக மாறினார் ஜாக்குலின்.

’குண்டா படச்ச கடவுளுக்கு நன்றி சொன்னேன்’ : ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ அஸ்வினி

விஜய் டீவியில் வி.ஜே-வாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட ’கனா காணும் காலங்கள்’ மற்றும் ’ஆண்டாள் அழகர்’ ஆகிய சீரியல்களில் ஜாக்குலின் நடித்துள்ளார். அதே நேரத்தில் நயன்தாராவுடன் ’கோலமாவு கோகிலா’ என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பன்னூர் தான் ஜாக்குலினின் சொந்த ஊர். சென்னை, செயிண்ட் மேரீஸ் பள்ளியில், பள்ளி படிப்பையும், லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பும் படித்தார்.

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தொடங்கி ஏழாவது சீசன் வரை அந்த நிகழ்ச்சியை ரக்‌ஷன், ஜாக்குலின் இருவரும் தொகுத்து வழங்கினார்கள். பிறரை கலாய்த்தும், தன்னை கலாய்ப்பதற்கு அசட்டுத்தனமாக சிரிப்பதும் என செம ஜாலியாக அந்நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. பின்னர் திடீரென முழு நேர சீரியல் நடிகையாக களம் இறங்கினார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி பி.ஏ’ என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஏழை மாணவர்களுக்கு தேடிச் சென்று தேவையான பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்!

பப்ளியான ஜாக்குலின் உணவுப் பிரியையும் கூட. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய உணவுகளை சாப்பிட்டுப் பார்ப்பாராம். அதோடு கார்டனிங்கிலும் அவருக்கு இஷ்டம் அதிகமாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tv Serial Tv Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment