Advertisment

இசையோடு இவரின் அழகும் பேசும்... சூப்பர் சிங்கர் மாளவிகா சுந்தர்

தமிழில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
vijay tv malavika sundar super singer malavika sundar instagram

vijay tv malavika sundar super singer malavika sundar instagram

vijay tv malavika sundar super singer malavika sundar instagram : எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

Advertisment

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான மாளவிகா சுந்தர் தற்போது பல நாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.

super singer malavika sundar super singer malavika sundar

வெல்வெட் நகரம் படத்தில் பாடகி மாளவிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருகந்தார். வெல்வெட் நகரம் பார்த்த பலரும் படத்தை பற்றிய பல விசயங்களை பகிரும் போது மாளவிகாவின் கதாபாத்திரம் பற்றியும் மாளவிகாவின் நடிப்பு பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். மாளவிகா இந்த படத்தில் மிக முக்கிய மற்றும் கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மாளவிகா தென்னிந்திய மொழிகளில் சிறந்த பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சூப்பர் சிங்கரில் பாட்டு பாடி கொண்டிருக்கும் போது தமிழக ரசிகர்களின் பேராதரவு இருந்தது. தற்போது நடிகையாகவும் சிறந்த நடிப்பை கொடுத்து இருப்பதால் தமிழில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் மட்டுமில்லை இந்தியிலும் மாளவிகா கலக்கி வருகிறார். இந்தியன் டால் என்ற நிகழ்ச்சியிலும் தனது இசை திறமையை வெளிப்படுத்தி வருகிறார். நீங்க கலக்குங்கம்மா!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment