Advertisment

டான்ஸர், சின்னத்திரையில் பாசமான சிஸ்டர்.. மோசமான வில்லி.. நாம் இருவர் நமக்கு இருவர்2 காயத்ரி ப்ரொஃபைல்!

பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி போன்று பல சீரியல்களில் வரிசையாக நடித்து வந்தார்.

author-image
WebDesk
New Update
gayathri yuvaraj

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே நடிப்பு மீது மிகுந்த ஆர்வம். இவர் ஒரு டான்ஸரும் கூட. கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90's ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்தார். அந்த கேரக்டருக்கு கிடைத்த ரீச்சை தொடர்ந்து பல முன்னணி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

Advertisment

பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி போன்று பல சீரியல்களில் வரிசையாக நடித்து வந்தார். எந்த கேரக்டர் கிடைத்தாலும் முழு ஈடுபாட்டுடன் தனது திறமையை வெளிப்படுத்த கூடியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அரண்மனை கிளி சீரியலில் ரேணுகா என்ற ரோலில் வில்லியாக நடித்தார். பாசிட்டிவ் கேரக்டரை விட நெகட்டிவ் கேரக்டர்தான் இவருக்கு அதிகமாக கிடைக்கிறதாம். நடிப்பை தாண்டி இவர் Mr and Mrs கில்லாடி, ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

காயத்ரி டான்ஸ் மீது இருந்த ஆர்வத்தால் டான்ஸர் யுவராஜ் என்பரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். அதன்பிறகு கொரோனாவால் ஏரளாமான சீரியல்கள் நின்று போனதால் சிறிது பிரக் எடுத்தார். ஊரடங்கு முடிந்தபின் இரண்டு முன்னணி சேனல்களில் நடித்து வருகிறார். விஜய்டிவியின் டாப் ஹிட் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக அப்பாவித்தனமாக நடிக்கிறார். இந்த சீரியலில் காயத்ரிக்கும் கத்திக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இந்த ஜோடிக்கு ஏராளமான ஃபேன்ஸ் பேஜஸ் உள்ளது.

அதேபோல் சன்டிவியின் முன்னணி சீரியலான சித்தி2 தொடரில் வெண்பாவின் அண்ணியாக நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் பயங்கர வில்லத்தனமாகவும், பாசமான தங்கையாகவும் வெவ்வேறு கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர்.

சினிமா நடிகைகளுக்கு இணையாக விதவிதமான காஸ்டியூம்களில் ஃபோட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். காயத்ரிக்கு சினிமாவில் ஒரு நல்ல ரோலில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். முக்கியமாக நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Naam Iruvar Namakku Iruvar Gayathri Yuvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment