vijayakumar granddaughter diya : கடந்த 2 நாட்களாக எந்த பக்கம் திரும்பினாலும் தியா குறித்த பேச்சு தான். அவரின் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் யார் இந்த தியா? என்று கேட்கிறீர்களா? நடிகர் விஜயகுமார் பேத்தி தான் தியா. நடிகர் அருண் விஜய்யின் அக்கா பொண்ணு.
2 நாட்களுக்கு முன்பு, நடிகர் விஜயகுமார் பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து அந்த பெண் குறித்த தேடல் கூகுளில் அதிகமானது. பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றம் கொண்ட அந்த பெண்ணின் பெயர் தியா. நடிகர் விஜயகுமாரின் சொந்த பேத்தி.
தமிழ் திரையுலகில் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகுமார். மிகப்பெரிய கலைக்குடும்பமான விஜயகுமாரின் வாரிசுகளும் சினிமாவில் கலக்கியவர்கள்.
வனிதா, ப்ரீத்தா,ஸ்ரீதேவி, அருண் விஜய். இதில் அக்கா-தங்கைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டனர். ஆனால், அருண் விஜய் இன்று கோலிவுட்டில் நம்பர் 1 நாயகனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/ajith-news-reactions-10.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/07/sachin-1.jpg)
விஜய குமாருக்கு மஞ்சுளா, முத்துக்கண்ணு என இரண்டு மனைவிகள். இவர்களுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய், வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என மகன், மகள்கள் இருக்கின்றனர். இதில் அனிதா டாக்டரை மணம் முடித்தார். சினிமாவில் முகம் காட்டியது இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/vj.png)
இவரின் மூத்த மகள் தான் தியா. தன் தாத்தாவுடன் நெருக்கமான தியா அடிக்கடி அவருடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வாராம். ஆனால் இந்த முறை தான் இப்படி வைரலானது. தற்போது தியாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/ajith-news-reactions-11.jpg)
கூடவே, மாமா அருண் விஜய்யுடன் தியா எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
”அழகென்றால் இவள் தானா” பிக் பாஸ் ஜூலியை இப்படி பார்த்து இருக்கீங்களா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil