Advertisment

பூர்வீகம் கேரளா.. கன்னடத்தில் ஸ்டார் நடிகை.. தமிழில் மெகா சீரியல் ஆக்டர்.. மௌனராகம் மல்லிகா கேரியர் கிராஃப்!

ஜானுமதா ஜோடி என்ற படத்தில் நடித்ததற்காக கர்நாடக அரசிடமிருந்து சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

author-image
WebDesk
New Update
chippi ranjith

பெங்காலி சீரியலை தழுவி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மௌனராகம். இதில் சக்தியின் அம்மா மல்லிகாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் சிப்பி ரஞ்சித். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். 1992ஆம் ஆண்டு வெளியான தலஸ்ட்னானம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பல மலையாளப் படங்களில் துணை வேடங்களிலும், சில முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பின்னர் இவர் 1996இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற கன்னடப் படமான ஜானுமதா ஜோடி என்ற படத்தில் நடித்தார். இதில் நடித்ததற்காக கர்நாடக அரசிடமிருந்து சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

Advertisment
publive-image

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த தர்மா படத்தில் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகில் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக ஷில்பா மற்றும் ரமேஷ் அரவிந்த் ஜோடி கருதப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு இவர் தனது கவனத்தை மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு மாற்றினார். ஸ்த்ரீஜனத்தில் மாயம்மா என்ற பாத்திரத்தில் இவர் நன்கு அறியப்பட்டார். பின்னர் இவரது தயாரிப்பின் (அவந்திகா கிரியேசன்) கீழ் பல தொடர்களில் நடித்தார். ஸ்த்ரீ ஓரு சந்தாவனம், ஆகாஷதூத்து உள்ளிட்ட பல மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். பல்வேறு பிரபலமான மலையாள நாடகத் தொடர்களில் நடித்ததற்காக இவர் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

publive-image

தமிழில் மௌனராகம் சீரியல் மூலம் என்ட்ரி ஆனார் சிப்பி ரஞ்சித். முதல் சீசனில் பேபி கிருத்திகா, பேபி ஷெரின் ஃபர்ஹானா, ராஜீவ் பரமேஷ்வர், ஷமிதா ஸ்ரீகுமார் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது 12 வருடத்திற்குப் பின்னர் என்று இந்த சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த தொடர். இரண்டு சீசனிலுமே சிப்பி ரஞ்சித் சக்தியின் அம்மாவாக மல்லிகா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

publive-image

கர்நாடக மாநில விருது, கன்னடப் படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ள சிப்பிக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். சீரியல் தயாரிப்பாளர், ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி, தொகுப்பாளினி, விளம்பரப்பட நடிகை, ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் என பல முகங்கள் உண்டு சிப்பி ரஞ்சித்துக்கு. நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரே சீரியல் மூலம் பாப்புலர் ஆக்டராக உள்ளார் மல்லிகா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial Mouna Raagam2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment