Advertisment

ஆன்லைனில் பெண்களுக்கு எதிரான வன்முறை; பாதுகாப்பு வழிமுறைகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Violence against women: Here’s how to stay safe online - ஆன்லைனில் பெண்களுக்கு எதிரான வன்முறை; பாதுகாப்பு வழிமுறைகள்

Violence against women: Here’s how to stay safe online - ஆன்லைனில் பெண்களுக்கு எதிரான வன்முறை; பாதுகாப்பு வழிமுறைகள்

ஆன்லைனில் பெண்களை இழிவுபடுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிப்பதில் , ஆன்லைனில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதிலும் சமமான எச்சரிக்கை தேவை.

Advertisment

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் எனும் சர்வதேச தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. பாலினம் அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களுக்கான ஐக்கியநாடுகள் சபையின் முறைப்படுத்தப்பட்ட செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மாரத்தான் ஓட்டங்கள், சைக்கிள் பேரணிகள், ஓவியப்போட்டிகள், பேரணிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு ஐ.நா-வின் கருத்தாக்கம் என்பது, ‘பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தலைமுறை சமத்துவம் நிற்கிறது! ‘ என்பதாகும். ஐ.நா சபையின் பொதுச்செயலாளருக்கு கீழே ஒரே குடையின் கீழ் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு கட்ட 2030-க்குள் இணைவோம் (UNiTE by 2030 to End Violence against Women)என்ற இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள், தன்னார்வலர்களால் அண்மை ஆண்டுகளாக #MeToo, #TimesUp, #Niunamenos, #NotOneMore, #BalanceTonPorc உள்ளிட்டவற்றை உலகம் முழுவதும் இயக்கமாக முன்னெடுத்தபோதும் பாலியல் வன்முறைகள் தொடர்ச்சியாக வழக்கமாக நடந்தபடியே இருக்கின்றன. நமது சமூக சூழலில் இவை எல்லாம் உட்பொதிந்துள்ளன. பாலியல் வன்கொடுமையை அற்பமாக நினைத்தல், பாதிக்கப்பட்டவரையே குற்றஞ்சாட்டுதல், திரைப்படங்கள் அல்லது தொலைகாட்சிகளில் பெண்களின் உடலை புறநிலைப்படுத்துதல், அழகுணர்ச்சி என்ற பெயரில் விளம்பரங்களில் வன்முறை அல்லது தொடர்ச்சியாக தவறான மொழியை உபயோகித்தல் என நாம் எல்லோரும் பாலியல் கலாசாராத்தின் அன்றாட சாட்சிகளாக, சில நேரங்களில் மெளனமாக பார்த்துக்கொண்டும் இருக்கின்றோம். இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

பெண்கள் நலனுக்கான ஐ.நா தூதுவர் நிக்கோலி கிட்மேன், பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு வரும் பணிக்காக 2006-ம் ஆண்டு முதல் ஆதரவு குரல் கொடுத்து வருகிறார். சர்வதேச தினத்தை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் நலனுக்கான ஐ.நா தூதுவர் என்ற வகையில், நாம் எல்லோரும் பங்கேற்று கடைமை ஆற்ற வண்டும் என்பது எனக்குத் தெரியும். 16 நாட்கள் இயக்கம் என்பது, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முன்னெடுப்பாக இருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நின்று, பெண்களுக்கு எதிரான அனைத்து வடிவிலான வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பங்கெடுப்பதுடன், இந்த ஆண்டின் இயக்கத்தில் இணையும்படி கேட்டுக் கொள்கின்றேன்.”

நம்மைசுற்றி உள்ள வெளி உலகில் மட்டுமின்றி, பெரும்பாலான பெண்கள் இணைய ரீதியிலான குற்றங்களுக்கு இரையாகின்றனர். ஆன்லைனில் தவறாக நடத்தப்படுவதற்கான எளிதான இலக்காக இருக்கின்றனர். ஆகையால், ஆன்லைனில் பெண்களை இழிவுபடுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிப்பதில் , ஆன்லைனில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதிலும் சமமான எச்சரிக்கை தேவை.

ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சமூக வலைதளங்களில் நட்பு கோரிக்கைகளை ஏற்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உங்களுடைய பதிவுகளை யார் பகிர வேண்டும் என்று அறிந்து உங்கள் பார்வையாளர்களை தேர்வு செய்யுங்கள்.

முகநூல் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் உங்களை டேக் செய்யும்ஆலோசனைகளை ஆஃப் செய்து வைக்கவும்.

சமூக வலைத்தளங்களை உபயோகித்து உங்கள் பெயரை எவ்வாறு தேடலாம் என்பதை கட்டுப்படுத்துங்கள்.

லாக்-இன் அறிவிப்புகள், அனுமதிகளை இயங்கும்படி வைக்கவும். இது நீங்கள் உங்கள்நண்பர்களுடன் இணைந்து நிற்க உதவும்.

உங்களுடைய அனுமதி இன்றி, உங்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை யாராவது ஒருவர் வெளியிட்டால், அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளிக்கவும்.

எப்போதுமே உங்கள் பாதுகாப்பை முதன்மையாக கருதுங்கள். ஆன்லைன் அல்லது வெளி உலகில் என எந்த இடத்திலும் நீங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தால் உரிய சட்ட அமைப்புகள் அல்லது பாதுகாப்பு ஆதரவு குழுக்களை தொடர்பு கொள்ளவும்.

தமிழில் : கே. பாலசுப்பிரமணி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment