சன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா?

சன்னியின் வாழ்க்கை பயணத்தை கூறும் வெப் சீரியஸ்

நடிகை சன்னி லியோன் தனது முதுகில் சிறுமி ஒருவரை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட் உலகில் இருக்கும் முக்கியமான பிரபலங்கள் வரிசையில் சன்னி லியோனும் ஒருவர். அவர் நடிக்கு படங்கள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவரின் ரசிகர்களுக்கு எப்பவுமே சன்னி லியோன் குயின் தான்.

வாழ்க்கையில் பலகட்ட சோதனைகளை கடந்து, தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ள சன்னி எப்போதும் தனது பழைய வாழ்க்கையை குறித்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதிவு செய்வார். இந்நிலையில், சன்னியின் வாழ்க்கை பயணத்தை கூறும் வெப் சீரியஸ் ஒன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூடிய விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்த தொடரில் சன்னி லியோனின் சிறு வயது ரோலில் நடிப்பதற்கான ஆட்கள் தேடும் வேட்டை தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. இந்நிலையில், சன்னி தனது ரோலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் சிறுமியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது ரோலில் நடிக்க இருக்கும் சிறுமியை சன்னில் முதுகில் தூக்கிக் கொண்டு ஒரு போஸ் கொடுத்துள்ளார். அதன் பதிவின் கீழ் ’ரைஷா எக்ஸ்’என்று அந்த சிறுமியின் பெயரையும் சன்னி பதிவிட்டுள்ளார்.

×Close
×Close