scorecardresearch

அப்பாவுக்கு 63 வயசு ஆகுது, ஆனாலும்.. விஜே தீபிகா வீடியோ

நம்ம எவ்ளோ வளந்தாலும் அப்பா அம்மா நம்மள பத்தி யோசிச்சு செய்ற குட்டி குட்டி விஷயம் கூட எப்போவும் ஸ்பெஷல் தான்- தீபிகா

அப்பாவுக்கு 63 வயசு ஆகுது, ஆனாலும்.. விஜே தீபிகா வீடியோ
VJ Deepika

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.

தீபிகா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது ஆங்கரிங் பயணம், சீரியல், வெற்றி தோல்வி, குடும்பம், முகப்பரு, அதிலிருந்து மீண்டு வந்தது என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அதில் தீபிகா பேசுகையில், நான் வீட்டுல மூனாவது பொண்ணு.  நான் மீடியாவுக்கு வரதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க. எந்தவொரு ஃபங்ஷனுக்கு போனாலும், அம்மாவ அழ வச்சுடுவாங்க. அம்மா அழுதுட்டே வந்து புலம்பிட்டே இருப்பாங்க.

இப்போமே நிறைய பேரு நீ படிச்சிருக்க. உனக்கு வீடு, குடும்பம் பாக்கணும்னா, படிச்ச வேலைக்கு போலாமே. ஏன் இதை பண்றனு’ கேட்பாங்க. ஆனா, இது என்னோட ஆசை என பல விஷயங்களை அந்த பேட்டியின் போது, தீபிகா மனம்திறந்து பேசினார்.

இதனிடையே, தீபிகா முன்னதாக தன் அப்பா, அம்மாவுக்கு என தன் சொந்த செலவில் சின்னதாக ஒரு அறையுடன் கூடிய ஓட்டு வீடு கட்டிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

அதில், இன்னைக்கு எங்க அம்மா அப்பாவுக்கு என்னால முடிஞ்ச ஒரு கிஃப்ட் கொடுத்துருக்கேன். ஒருவேளை பாக்குற உங்களுக்கு இது சின்னதா தெரியலாம் ஆனா அதுல வாழ போற எங்களுக்கு இது கனவு. நிம்மதியா தூங்க ஒரு இடம் வேணும் நினைச்சவங்களுக்கு இந்த குட்டி வீடு கண்டிப்பா சந்தோஷம் தரும்னு நம்புறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தீபிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ பார்ப்போரை ரசிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் தீபிகா அப்பா, ஒரு பெரிய ட்ராலி பேக்கை தோளில் சுமந்து தீபிகாவை ஸ்கூட்டியில் ஏற்றி, ரயில்வே நிலையத்தில் விட்டு, ரயில் கிளம்பும் வரை காத்திருந்து டாட்டா சொல்லி வழியனுப்பி வைக்கிறார்.

எவ்ளோ வளந்தாலும் அப்பா அம்மாவுக்கு குழந்தைதான்

அப்பாவுக்கு 63 வயசு ஆகுது, ஆனாலும் என்னோட பேக்ஸ அவுங்கதான் தூக்கிட்டு போவாங்க, ஏன்னா அவுங்க பொண்ணு அவ்வளவு சுமைய தூக்க கஷ்டப்படுவான்னு…

எங்க அம்மா, அப்பாவும் நானும் போற ஸ்கூட்டி மறையுற வர ரோடுல நின்னு எனக்கு டாட்டா சொல்லுவாங்க.

நம்ம எவ்ளோ வளந்தாலும் அப்பா அம்மா நம்மள பத்தி யோசிச்சு செய்ற குட்டி குட்டி விஷயம் கூட எப்போவும் ஸ்பெஷல் தான் என்று தீபிகா இந்த அழகான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vj deepika instagram vj deepika family

Best of Express