Advertisment

அம்மாத்தா, அம்மா, நான்! விஜே மணிமேகலை ஃபேமிலி போட்டோ 

இப்போது, மணிமேகலை, KPY பாலா இருவரும் நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்குவதற்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.

author-image
abhisudha
New Update
VJ Manimegalai

VJ Manimegalai

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவர் விஜே மணிமேகலை. இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.

Advertisment

தற்போது மணிமேகலை ரியாலிட்டி ஷோ, யூடியூப் என பிஸியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.

மணிமேகலையும், ஹூசைனும் தங்கள் சொந்த ஊரில் 2 ஏக்கரில் சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கினர், இப்போது அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளனர்.

இப்போது, மணிமேகலை, KPY பாலா இருவரும் நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்குவதற்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்நிலையில், மணிமேகலை சமீபத்தில் தன் அம்மா மற்றும் பாட்டியுடன் எடுத்த ஃபோட்டோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

அதை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மணிமேகலை அதில், ’எனது குடும்பத்தின் 3 தலைமுறை பெண்கள்  

அம்மாத்தா அம்மா & நான்

என் வாழ்க்கையின் இரண்டு ராக்கிங் மற்றும் வலிமையான பெண்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள், உங்க ஃபேமிலி கூட சேந்துட்டீங்களா என்றும்… உங்கள் குடும்பத்துடன் உங்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் சந்தித்த போராட்டங்களும் வலிகளும் ஒருபோதும் வீண் போகவில்லை மகிழ்ச்சியாக இருங்கள்… என்றும், 4வது தலைமுறையை பார்க்க காத்திருக்கிறோம் என்றும் வாழ்த்தி கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment