Advertisment

பெஸ்ட் வாஷிங் மெஷின் வாங்குவது எப்படி? இந்த 5 விஷயங்களை நோட் பண்ணுங்க!

ஒரு நல்ல வாஷிங் மிஷின் வாங்குவது என்பது கெபசிட்டி, மின் நுகர்வு, பட்ஜெட், பிராண்ட் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Washing machine guide

Washing machine guide

வாஷிங் மெஷின் இன்று நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறிவிட்டன. ஆனால் ஒரு நல்ல வாஷிங் மிஷின் வாங்குவது என்பது கெபசிட்டி, மின் நுகர்வு, பட்ஜெட், பிராண்ட் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது.  இவை குயிக் வாஷ், வாஷ் புரோகிராம்கள், சைல்ட் லாக், ஹாட் வாஷ்/வெப்பநிலை கட்டுப்பாடு, டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்ற தனித்துவமான அம்சங்களையும் கொண்டுள்ளது.

Advertisment

எனவே நல்ல விசாரித்த பிறகு, எந்த மிஷின் வாங்கலாம் என்று முடிவு செய்யுங்கள்.

வாஷிங் மெஷின் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

வாஷிங் மெஷின் லோடிங் டைப்

லோடிங் டைப் என்று வரும்போது, ஃபிரண்ட் லோட் வாஷிங் மெஷின் அல்லது டாப் லோடிங் வாஷிங் மெஷினில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

கதவு அமைந்துள்ள இடம் தான் இந்த இரண்டு ஸ்டைலையும் வேறுபடுத்துக்கிறது. டாப் லோடில் துணிகள் மேலிருந்து போட வேண்டும், அதே நேரத்தில் ஃபிரண்ட் லோடில், மெஷின் முன் பக்கத்தில் கதவு இருக்கும்.

ஃபிரண்ட் லோட் வாஷிங் மெஷினை விட, டாப் லோட்ஸ் உங்கள் ஆடைகளில் மென்மையாக இருக்கும்.

ஃப்ரண்ட் லோடர்கள் குறைந்த அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும். ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் மெஷின்களுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது.

வாஷிங் மெஷின் ஃபங்ஷன் டைப்

உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்து, செமி ஆட்டோமெட்டிக் அல்லது ஃபுல்லி ஆட்டோமெட்டிக் வாங்கலாம்.

செமி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் இரண்டு டப்ஸ்களுடன் வருகின்றன - ஒன்று கழுவுவதற்கும், மற்றொன்று உலர்த்துவதற்கும் ஆகும். இந்த வகை மெஷினில் நீங்கள் துணிகளைக் கழுவியவுடன், டிரையருக்கு மாற்ற வேண்டும்.

அதேநேரம் ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினுக்கு கை வேலை எதுவும் தேவையில்லை. மெஷினில் துணிகளை போடுவதில் இருந்து, வேலை முடிந்ததை மெஷின் ஒலியுடன் உங்களுக்குத் தெரிவிக்கும் வரை நீங்கள் அதை மறந்துவிடலாம்.

கெபசிட்டி

ஸ்மால் மற்றும் லார்ஜ் கெபசிட்டி கொண்ட வாஷிங் மெஷின்கள் உள்ளன. உங்கள் குடும்பத்தின் அளவு பொறுத்து உங்கள் தேர்வு மாறுபடலாம். வாஷிங் மெஷின் கெபசிட்டி கிலோகிராமில் அளவிடப்படுகிறது, இது நீங்கள் துவைக்கத் திட்டமிடும் துணிகளின் எடையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. சில ஆடைகள் இலகுவானவை, ஆனால் போர்வை போன்றவை அதிக இடத்தை எடுக்கும்.

டிரம்மில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் துணிகளை நிரப்புவது நல்லது, இதனால் ஆடைகள் எளிதாக நகரும் மற்றும் சிறந்த துவைக்கும் தரத்தை அளிக்கிறது.

வாஷிங் டிரம்/ டப் மெட்டீரியல்

வாஷிங் மெஷினை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் வாஷிங் டப்பின் மெட்டீரியல். பொதுவாக இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான்-எனாமல் அல்லது பிளாஸ்டிக்கால் ஆனது. பிளாஸ்டிக் டப், எனாமல் விட நீண்ட காலம் நீடிக்கும்.

ஆயினும்கூட, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிறந்தவை, அவை பிளாஸ்டிக் டப்களை விட வலிமையானவை, அதிக சுழல் வேகத்தைத் தாங்கும் மற்றும் மிக நீண்ட காலம் நீடிக்கும். மேலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிரம்கள் அதிக ஆற்றல் திறன் கொண்டவை.

பாதுகாப்பு அம்சங்கள்

ஒரு வாஷிங் மெஷின் வாங்கும் போது, ​​பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.

நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே:

வாஷ் செட்டிங்ஸ்

சைல்ட் லாக்

ஆட்டோ ரீஸ்டார்ட்

ஓவர் ஃப்ளோ கண்ட்ரோல் அல்லது வாட்டர் லவல் கண்ட்ரோல்

ஓவர் ஹீட்டிங் கண்ட்ரோல்

ரோடண்ட் ப்ரொடக்‌ஷன்

ஸ்பின் ஸ்பீடு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment