அனுஷ்காவை விட கோலிக்கு அதீத காதல் தாடி மேல் தான்... அதிர்ச்சி வீடியோ!

கோலியின் வீட்டில் எடுக்கப்பட்ட இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அதீத காதல் அவரின் தாடி மேல் தான், அதனால் தான் அதை இன்யூரன்ஸ் செய்துள்ளார் என்று பிரபல கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேப்டன் விராட் கோலியை அடிக்கடி தாடியுடன் பார்க்கலாம். சமீப காலமாக அவரின் அடையாளமாக கூட தாடி மாறிவிட்டது.இந்நிலையில் விராட் தனது தாடியை இன்யூரன்ஸ் செய்திருப்பதாக கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் 2 நபர்கள் விராட் கோலியின் தாடியை அளவு எடுக்கின்றனர், பின்பு வித விதமாக ஃபோட்டோவும் எடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கோலியின் சில பக்கங்களில் கையெழுத்து வாங்குகின்றனர். எதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விராட் கோலி எந்த ஒரு தகவலையும் பகிரவில்லை.

ஆனால், விராட் தனது தாடியை தான் இன்யூரன்ஸ் செய்ததாக லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் “ உங்களுக்கு தாடி மீது தனி பிரியம் உண்டு என்பது தெரியும் கோலி. ஆனால் இந்த வீடியோவை பார்க்கும்போது, இன்சூர் செய்யும் அளவுக்கு தாடி மீது அவ்வளவு பிரியமா” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் வீட்டில் எடுக்கப்பட்ட இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. சென்ற வருடம் அனுஷ்காவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட விராட் , தனது அதிகப்படியான காதல் அனுஷ்கா மீது தான் என்று அடிக்கடி கூறுவார். ஆனால், இப்போது அதையும் தாண்டி தாடியை இன்சூரன்ஸ் செயும் அளவிற்கு விராட் கோலி சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close