Advertisment

கோபம் எப்போதும் வடுக்களை விட்டுச்செல்கிறது... அதனை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?

Ways to control anger tips motivation video Tamil News நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், நீங்கள் மன்னிக்கப்படலாம். ஆனால், நீங்கள் ஏற்படுத்தும் காயங்கள் எப்போதும் இருக்கும்.

author-image
WebDesk
New Update
Ways to control anger tips motivation video Tamil News

Ways to control anger tips motivation video Tamil News

Ways to control anger tips motivation video Tamil News : கோபம் என்பது நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் அனுபவிக்கும் ஒரு பொதுவான மனித உணர்வு. மற்ற எல்லா விஷயங்களைப் போலவே, அளவுக்கு அதிகமான கோவம், உங்கள் நல்வாழ்வுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும், நீங்கள் கோபமாக இருக்கும்போது நீங்கள் சொல்வதும் செய்வதும் ஒருவரின் வாழ்க்கையிலும் மனதிலும் நிரந்தர வடுக்களைக் கொடுக்கும்.

Advertisment

அதனால்தான் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக ஆகிறது. இந்த ஊக்கமளிக்கும் வீடியோவில், ஒரு தந்தை தனது கோபமான மகனுக்கு மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருப்பதன் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

தன் மகன் அடிக்கடி தேவையில்லாத தருணங்களில் நிதானத்தை இழப்பதையும், மற்றவர்களைப் பார்த்துப் பழிவாங்குவதையும் பார்த்த தந்தை அவனுக்கு ஒரு பணியை நியமித்தார். அது தன் மகனுடைய நிதானத்தைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். அதாவது, கோபம் வரும்போதெல்லாம் அந்த இளைஞனை சுவரில் ஆணி அடிக்கச் சொன்னார் தந்தை. அந்த இளைஞனும் இரண்டு நாட்கள் அதேபோன்று செய்துவிட்டு வெற்றியுடன் தந்தையைப் பார்க்கச் சென்றான்.

ஆனால், அந்த இளைஞரை இப்போது விடுவிப்பதற்குப் பதிலாக, அந்த சுவரிலிருந்து அடிக்கப்பட்ட ஆணிகளை வெளியே எடுக்கச் சொன்னார். மகனும் அவ்வாறே செய்தான். இப்போதுதான் கோபத்தை இழப்பதன் அர்த்தம் மகனுக்கு உண்மையாகக் காட்டியது. அவனுடைய தந்தை அவனை அந்த சுவர் பக்கம் அழைத்துச் சென்று, “சுவரை பார். இது உன் கோபத்தின் துளைகளால் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது மீண்டும் அதே போல் தோன்றாது” என்றார்.

நாம் அனைவரும் கோபப்படுகிறோம், நிதானத்தை இழக்கிறோம். ஆனால், கோபமாக இருக்கும்போது நாம் பேசுவதும் செய்வதும் ஒருவரை நிரந்தரமாகக் காயப்படுத்தக்கூடும் என்பதை அன்றே மகன் கற்றுக்கொண்டான். நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், நீங்கள் மன்னிக்கப்படலாம். ஆனால், நீங்கள் ஏற்படுத்தும் காயங்கள் எப்போதும் இருக்கும். ஏனென்றால் கோபம் எப்போதும் வடுக்களை விட்டுச்செல்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Relationship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment