Advertisment

சுவையான உருளைக்கிழங்கு டிஷ்க்கு புதினா டிப்… புதிய வீக் எண்ட் ரெசிபி

Try this easy rosemary baby potatoes recipe over the weekend: உருளைக்கிழங்கு சமைக்க எளிதானது, அதிக ஊட்டச்சத்து உள்ளது, மேலும் அதிக காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் பரிசோதனை செய்ய இந்த உருளைக்கிழங்கு உங்களுக்கு ஏராளமான இடங்களைக் கொடுக்கும்.

author-image
WebDesk
New Update
சுவையான உருளைக்கிழங்கு டிஷ்க்கு புதினா டிப்… புதிய வீக் எண்ட் ரெசிபி

நாம் எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதனை, நீங்கள் வறுக்கலாம், பொரிக்கலாம் வேகவைக்கலாம், அவை எப்போதும் சுவையாகவே இருக்கும். இந்த பேபி உருளைக்கிழங்கு செய்முறையில் கூடுதலாக, சமையல்கலை நிபுணர் அமிர்தா ரைச்சந்த் மூலிகைகள் மற்றும் ஒரு புதினா டிப் உடன் மிகவும் சுவையான மற்றும் மென்மையான தொடுதலை சேர்க்கிறார். இந்த உருளைக்கிழங்கு சமைக்க எளிதானது, அதிக ஊட்டச்சத்து உள்ளது, மேலும் அதிக காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் பரிசோதனை செய்ய இந்த உருளைக்கிழங்கு உங்களுக்கு ஏராளமான இடங்களைக் கொடுக்கும். விரைவான சிற்றுண்டிக்காகவோ அல்லது இரவு உணவிற்கு ஒரு சைட் டிஷாகவோ நீங்கள் இதை தயார் செய்யலாம். புதினா டிப் பெரிய அளவுகளிலும் தயாரிக்கப்படலாம், ஏனெனில் இது பல்வேறு சிற்றுண்டிகளுடன் சேர்த்து உண்ணலாம்.

Advertisment

உருளைக்கிழங்கு

தேவையான பொருட்கள்

பேபி உருளைக்கிழங்கு - 250 கிராம்

வெண்ணெய் - 1 தேக்கரண்டி அல்லது அதற்கு மேல்

புதிய ரோஸ்மேரி இலைகள் - சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

நொறுக்கப்பட்ட கருப்பு மிளகு -1 தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் -1 தேக்கரண்டி

நறுக்கிய மல்லித் தளை - சிறிதளவு (அழகுபடுத்த)

எலுமிச்சை சாறு – சிறிதளவு

மூன்று வண்ண குடைமிளகாய் – ¼ கப்

செய்முறை

* ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கைச் சேர்த்து ஒரு முட்கரண்டி கொண்டு குத்தவும் அல்லது அவற்றை பகுதிகளாக வெட்டவும்.

* வெண்ணெய், உப்பு, மிளகு மற்றும் சில ரோஸ்மேரி இலைகள் கொண்டு மசாஜ் செய்யவும்.

* ஒரு கடாயை சூடாக்கி ஆலிவ் எண்ணெய், மிளகாய் வற்றல் சிறிது கடல் உப்பும் சேர்த்து உருளைக்கிழங்கில் டாஸ் செய்யவும்.

* அவை மிருதுவாகத் தோன்றும் வரை குறைவான வெப்பத்தில் இருக்கட்டும், பின்னர் மீதமுள்ள ரோஸ்மேரி இலைகளைச் சேர்த்து உருளைக்கிழங்கிற்கு ஒரு சில டாஸ்கள் கொடுங்கள். உருளைக்கிழங்கை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

* இப்போது அதே வாணலியில், குடைமிளகாய் சேர்த்து சிறிது உப்பு மற்றும் மிளகு தெளிக்கவும். அவை நன்கு வேக வைத்த பிறகு, அவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.

* குச்சிகளை எடுத்து ஒவ்வொன்றிலும் உருளைக்கிழங்கு மற்றும் குடைமிளகாயை அடுக்கவும். மேலே எலுமிச்சை சாற்றை பிழிந்து மல்லித் தளை கொண்டு அலங்கரிக்கவும்.

புதினா மற்றும் தயிர் டிப்

தேவையான பொருட்கள்

தயிர் - 1 கப்

புதினா இலைகள் - சிறிதளவு

பூண்டு - 5-6 பல்

உப்பு மற்றும் மிளகு – தேவையான அளவு

தேன் - 2 தேக்கரண்டி

செய்முறை

* முதலில் பூண்டை உரித்து, வாணலியில் நன்கு வறுக்கவும்.

* தயிர் சீராக வரும் வரை கலக்க வேண்டும்.

* தயிரில் தேன், உப்பு, மிளகு சேர்த்து நன்கு கலக்கவும்.

* சில புதினா இலைகளில் டாஸில் வைத்து, வறுத்த பூண்டை தயிரில் பிழியவும்.

* நன்கு கலந்து, தேவைப்படும் வரை குளிரூட்டவும்.

இதனை அந்த உருளைக்கிழங்குடன் சேர்த்து சாப்பிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Receipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment