Advertisment

முட்டை, தயிர், பழம்... காலை உணவுக்கு இவை ஏன் முக்கியம் தெரியுமா?

Weight Loss Tips: உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் கட்டாயம் காலை உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weight loss, foods for weight loss, bananas for weight loss, oatmeal for weight loss, healthy foods, healthy eating, weight loss plans, indian express lifestyle, indian express news

Weight Loss Tips

Weight Loss News In Tamil: உடல் எடை குறைப்பு என்பது தற்போதைய நவநாகரீக யுகத்தில் பெரும் வியாபாரமாகவே மாறிவிட்டது. தற்போதைய லைப்ஸ்டைல், உடல்சார்ந்த நடவடிக்கைகள் குறைவு, உணவுப்பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால், நமது உடலின் எடை அபரிமிதமாக அதிகரித்து பல்வேறு முக்கிய நோய்களுக்கு நாமே காரணமாக அமைந்துவிடுவதுபோல் ஆகிவிடுகிறது.

Advertisment

நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை தக்க நேரத்தில் அழித்து நமது உடலை சிக் என்று வைத்திருக்க சில உணவுமுறைகள் நமக்கு உதவுகின்றன. காலை உணவு என்பது நமது உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அன்றைய நாளின் துவக்கத்தில் நாம் துடிப்புடன் செயல்பட காலை உணவு இன்றியமையாததாகிறது என்று விட்டாபயாட்டிக் பிட்னெஸ் நிபுணர் ரோகித் ஷெலாத்கர் தெரிவித்துள்ளார்.

காலை உணவாக இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பயப்பட வேண்டாம் என்று சில உணவுகளை பரிந்துரைத்துள்ளார்.

ஓட் மீல் : ஓட் மீல் மிகச்சிறந்த காலை உணவாகும். இது அன்றைய நாளில் நாம் துடிப்புடன் செயல்படுவதற்கான சக்தியை தருவதோடு மட்டுமல்லாது ரத்த்தில், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள பீட்டா குளுகான் எளிதில் கரையும் நார்ச்சத்து ஆகும்.

வாழைப்பழம் : வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. இன்சுலின் சென்சிட்டிவிட்டிக்கு வாழைப்பழம் உதவுகிறது. இதயம் சீராக இயங்குவதற்கு தேவையான மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் வாழைப்பழத்தில் உள்ளன.

 

Weight Loss News In Tamil Weight Loss Tips Weight Loss by Curd Eggs Bananas- உடல் எடை குறைப்பு காலை உணவு Weight Loss Tips

முட்டை : உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் கட்டாயம் காலை உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் கலோரி குறைவாகவும், புரதம் அதிகளவிலும் உள்ளது. காலை உணவாக முட்டைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், மதிய சாப்பாட்டிற்கு முன்பாக நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது தவிர்க்கப்படும்.

பெர்ரி பழங்கள் : பெர்ரி பழங்களில் அதிகளவு ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. புளுபெர்ரீஸ், ராஸ்பெரிஸ், ஸ்ட்ராபெரிஸ், பிளாக்பெர்ரிஸ்களில் அதிகளவு நார்ச்சத்தும், குறைந்த அளவில் சர்க்கரையும் உள்ளன.

தயிர் : தயிரில் உள்ள புரதம், உடல் கட்டுக்கோப்பாக இருக்க உதவுகிறது, இது எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது, இயற்கையிலேயே கிடைப்பதால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை.

 

Weight Loss News In Tamil Weight Loss Tips Weight Loss by Curd Eggs Bananas- உடல் எடை குறைப்பு காலை உணவு Weight Loss News In Tamil

கிரீன் டீ : ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்தது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் , எலுமிச்சை சேர்த்து பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்.

மேற்கூறிய உணவுகளை, வெவ்வேறு காம்பினேசன்களில் காலை உணவாக எடுத்துக்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காமல், சிக் என்று எப்போதும் இளமையுடன் வாழலாம் என்று ஷெலாத்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Weight Loss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment