டீ-யில் இவ்ளோ நன்மையா? ஆனா, இது வெள்ளை டீ!

How to loss weight by using white tea: ஒரு தேக்கரண்டி தேயிலையை எடுத்து தண்ணீரில் போட்டு ஒரு நிமிடத்தில் செய்யலாம்.

By: June 15, 2020, 7:32:18 AM

Weight Loss Tamil News: வெள்ளை தேனீர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் அதன் பல ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் நிச்சயமாக இழக்கிறீர்கள். இந்த தேனீர் camellia sinensis தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்டு ஒரு நபருடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உயர்த்தக்கூடிய பல ஊட்டச்சத்துக்களுடன் வருவதாக கூறப்படுகிறது.


இந்த தேயிலைகளுக்கு எந்த வித பக்குவபடுத்துதலும் தேவையில்லை. மேலும் இது காற்று மற்றும் சூரிய ஒளியில் இயற்கையாக உலரக்கூடும். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாலேயே இந்த தேயிலைக்கு அந்த பெயர் வந்தது. இதன் சுவையும் நுட்பமானது, உண்மையில் இது பச்சை தேயிலையை (green tea) விட லேசானது. முதன்முதலாக 16 ஆம் நூற்றாண்டில் சீனாவில் இந்த தேயிலை கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 1876 ஆம் ஆண்டில், இது ஒரு ஆங்கில வெளியீட்டில் தோன்றியது, அதில் இந்த வெள்ளை தேநீர், கருப்பு தேநீர் என வகைப்படுத்தப்பட்டிருந்தது. இதன் சுவையைப் பொறுத்தவரை, இந்த பானம் சற்று இனிப்பாக மற்றும் பழம் போன்ற சுவையுடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

How to loss weight by using white tea: ஆரோக்கிய நன்மைகள்

* இந்த தேனீர் சில antioxidant பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுவதை எதிர்த்துப் போராட, உடல் அழற்சி மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பற்ற அமைப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட இது உதவுகிறது.

* இது ஒரு நல்ல வாழ்க்கை முறை தேர்வாகும், ஏனெனில் இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும், ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

* Metabolism அதிகரிப்பதன் மூலமும், உடல் கொழுப்பை திறம்பட எரிப்பதன் மூலமும், இந்த தேயிலை எடை குறைப்புக்கு அற்புதமாக வேலை செய்கிறது என்றும் கூறப்படுகிறது

* மேலும் இதில் fluoride, catechins மற்றும் tannins அதிகமாக உள்ளது. Tannins தேனீருக்கு அதன் நிறத்தை தருகின்றது, fluoride பல் சொத்தையை தடுக்கும் மேலும் catechins பற்களை பாக்டீரியாவில் இருந்து பாதுகாக்கும்.
* எலும்பு அடர்த்தியை அப்படியே வைத்திருப்பதன் மூலம், catechins osteoporosis அபாயத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது

தேனீரை எவ்வாறு உருவாக்குவது என்பதை பார்க்கலாம்.

வழக்கமான தேநீரைப் போல இதை அதிக நேரம் சூடாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதன் சுவையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இதை குறைந்த வெப்பநிலையில் தயாரிக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி தேயிலையை எடுத்து தண்ணீரில் போட்டு ஒரு நிமிடத்தில் செய்யலாம். தேனீர் பைகள் (tea bags) வடிவிலும் வழக்கமான தேயிலை போலவும் இது வருகிறது. இதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து iced தேனீராகவும் அருந்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Weight loss tamil news how to loss weight by using white tea

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X