Advertisment

காலையில் வெந்தயம்... என்ன பயன்கள்? எப்படி சாப்பிடுவது?

கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேவையான அளவு தேன் கலந்தால் உடனே ரெடியாகிவிடுகிறது இந்த வெந்தய டீ.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காலையில் வெந்தயம்... என்ன பயன்கள்? எப்படி சாப்பிடுவது?

What is the best time to consume fenugreek seeds : இந்திய சமையலறைகளில் அதிகம் காணப்படும் ஒரு உணவுப்பொருள் வெந்தயம். காரசாரமான உணவு வகைகள் முதல் பராத்தாக்கள் வரையில் கணிசமாக நாம் அதனை பயன்படுத்தி வருகின்றோம். நீரிழிவு நோய், செரிமான கோளாறு போன்றவற்றை கட்டுக்குள் வைப்பதுடன் எலும்புகளையும் வலுப்பெற செய்கிறது.

Advertisment

ஆனால் எப்போது வெந்தயத்தை உட்கொள்வது என்பதில் கொஞ்சம் குழப்பம் தான். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதன் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் உணவுகளில் கணிசமாக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். International Journal For Vitamin and Nutrition Research என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் தினமும் காலையில் ஊறவைத்த 10 கிராம் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் அது இரண்டாம் நிலை நீரிழிவை கட்டுக்குள் வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஊறவைத்த தண்ணீரை தினமும் குடித்தால் அது ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

எப்படி வெந்தயத்தை எடுத்துக் கொள்வது?

கொதிக்கின்ற நீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போடவும். 10 நிமிடங்கள் அந்த நீரில் அது ஊறியவுடன், வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேவையான அளவு தேன் கலந்தால் உடனே ரெடியாகிவிடுகிறது இந்த வெந்தய டீ.

வெந்தயத்தில் இருக்கும் நார்சத்து உடலில் கொழுப்பை குறைக்க உதவும். கோலோன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது. மலச்சிக்கல், வயிற்று பிரச்சனை, நெஞ்செரிச்சல் ஆகியவற்றையும் சரி செய்கிறது.

வெந்தயத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கிறது.

வெந்தயத்தை துணியில் சுற்றி, உடல் வலி, தசை வலி ஆகியவற்றிற்கு ஒத்தடம் கொடுத்தால் அவையும் விரைவில் குணம் அடையும் என்று ரிங்கி குமாரி கூறியுள்ளார். ஃபோர்டிஸ் மருத்துவமனையில் தலைமை உணவு ஆலோசகராக பணியாற்றி வருகிறார் இவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment