உங்களை மட்டும் கொசு அதிகமாக கடிக்கிறதா? இந்த 7 காரணங்களை கவனிங்க!

Some people are more susceptible to mosquito bites than others; here’s why: “கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அதிக எடை கொண்ட அல்லது பருமனான மக்கள் அதிக ஓய்வெடுக்கும் வளர்சிதை மாற்ற விகிதங்களைக் கொண்டுள்ளனர், இது கொசுக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்”

கொசுக்கள் தொல்லைதரக்கூடியவை, இரத்தத்தை உறிஞ்சுக்கூடியவை, நோயைக்கிருமிகளை சுமப்பவை, இதனால், அவை ஏராளமான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. மழைக்காலங்களில், குறிப்பாக, மருத்துவர்கள் வீட்டை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள், மேலும் திறந்த மேற்பரப்பில் நீர் தேங்குவதை அல்லது சேமிப்பதை தவிர்க்கவும் வலியுறுத்துகிறார்கள்.

மக்கள் கொசுக்களை வெறுக்க பல காரணங்கள் உண்டு. அதில் கொசுக்களின் கடி முதலிடத்திற்கு தகுதி பெறுகிறது. அந்தி வேளையில் ஒரு தோட்டத்தில் உட்கார்ந்து பூச்சிகளால் தாக்கப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். சிலர், மற்றவர்களை விட நாம் அதிகம் கொசு கடியால் பாதிக்கப்படுகிறோம் என்று நினைக்கிறார்கள், மேலும் அவர்கள் இந்த தொல்லை தரும் சிறிய விஷயங்களை அதிகம் கவனிக்கிறார்கள், இதன் விளைவாக அதிக கலக்கம் ஏற்படுகிறது.

ஆனால் அது எப்படி நடக்கும்? உண்மையில் இதில் ஏதேனும் உண்மை இருந்தால், கொசுக்கள் சிலரை, மற்றவர்களை விட அதிகமாக கடிக்கின்றன ஏன்?

இதற்கு தர்க்கரீதியான அறிவியல் விளக்கம் உள்ளது.

2014 ஆம் ஆண்டில் TIME இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், புளோரிடா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பூச்சியியல் வல்லுநரும் கொசு நிபுணருமான டாக்டர் ஜொனாதன் டே, உண்மையில் கொசுக்களுக்கு சிலரை மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். “சிலர் அவர்களது சருமத்தில் சில வேதிப்பொருட்களை அதிகம் உற்பத்தி செய்கிறார்கள். லாக்டிக் அமிலம் போன்ற சில ரசாயனங்கள் கொசுக்களை ஈர்க்கின்றன, ”என்று அவர் விளக்கினார்.

O – இரத்த வகை மற்ற இரத்த வகைகளை விட கொசுக்களை அதிகமாக ஈர்க்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. மரபணுக்கள் இரத்த வகைக்கு காரணமாவதால், சிலர் ஏன் அதிகமாக தாக்கப்படுகிறார்கள் என்பதற்கு மரபியல் ஒரு காரணியாக இருந்தது என்றும் ஜொனாதன் கூறினார்.

கட்டுரையில், பூச்சியியல் வல்லுநர்கள், கொசுக்கள் “கடித்த இலக்குகளை அடையாளம் காண்பதற்கான முதன்மை வழிமுறையாக CO2 ஐப் பயன்படுத்துகின்றன” என்றும், எல்லா முதுகெலும்பு உள்ள உயிரினங்களும் கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்வதால், அவை கொசுக்களுக்கு எளிதாக இருப்பதாகவும் ஜொனாதன் விளக்கினார்.

கூடுதலாக, “கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அதிக எடை கொண்ட அல்லது பருமனான மக்கள் அதிக ஓய்வெடுக்கும் வளர்சிதை மாற்ற விகிதங்களைக் கொண்டுள்ளனர், இது கொசுக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்” என்று ஜொனாதன் மேற்கோளிட்டுள்ளார்.

மற்ற காரணிகளாக, இருண்ட ஆடைகளை அணிந்துகொள்வது மற்றும் “நிறைய இயக்கம்”, அதாவது “நிறைய சுற்றிக் கொண்டிருப்பது அல்லது சைகை செய்வது”, பெண் கொசுக்கள் வந்து கடிக்கப்படுவதற்கான சமிக்ஞை என்று ஜொனாதன் கூறினார்.

இதை கருத்தில் கொண்டு, குருகிராமின் ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இயக்குநர்-நரம்பியல் டாக்டர் பிரவீன் குப்தா, indianexpress.com இடம் கொசு கடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க, கொசுக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றவர்களை விட கீழ்கண்ட விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

1. O –  இரத்தக் குழு உள்ளவர்களுக்கு அதிகமாக கொசு கடிப்பதாக சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

2. சிலர் வியர்வையின் மூலம் அதிக ரசாயனங்களை சுரக்கிறார்கள், இது கொசுக்களை ஈர்க்கிறது.

3. அதிகமாக வியர்த்தவர்கள், லாக்டிக் அமிலம் மற்றும் அம்மோனியாவை வெளியே விடுபவர்களை கொசு அதிகமாக கடிக்கிறது.

4. இதேபோல், அதிக கார்பன் டை ஆக்சைடு வெளி விடுபவர்களை கொசு அதிகமாக கடிக்கிறது.

5. அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களையும் கொசு கடிக்கிறது.

6. ஆல்கஹால் குடிப்பவர்கள், குறிப்பாக பீர். அவர்கள் வியர்வை அதிகமாக சுரக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

7. ஒரே மாதிரியான மரபணு முன்கணிப்பு உள்ளவர்கள்.

இந்த கொசுக்களை ஈர்க்கும் பண்புகளுக்கு நீங்கள் தகுதி பெற்றால், பாதுகாப்பாக இருங்கள். “பாதுகாப்பு ஆடை”, “விளையாட்டு வீரர்கள் அல்லது மீனவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இலகுரக, சுவாசிக்கக்கூடிய துணிகள் போன்ற உங்களை கொசுக்களிடமிருந்து பாதுகாக்க தேவையான ஆடைகளை அணிந்து, கொசுக்களிடம் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள் என ஜொனாதன் பரிந்துரைக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What makes some people more susceptible to mosquito bites than others

Next Story
‘மெட்டி ஒலி ராஜம்’ முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை அம்மா வரை… நடிகை சாந்தி வில்லியம்ஸ் பயோகிராபி..santhi williams
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com