Advertisment

தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் விளக்கம்

நீங்கள் ஒரே நேரத்தில் ஆஸ்பிரின் (300 மி.கி.), க்ளோபிடோக்ரல் (300 மி.கி.) மற்றும் அடோர்வாஸ்டாடின் (80 மி.கி.) ஆகிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
What should you do if you are alone and have a heart attack?

மாரடைப்பு நோயாளிகளுக்கு நெஞ்சு வலி, தோள்பட்டையில் வலி, சுவாசிப்பதில் சிரமம், படபடப்பு உள்ளிட்ட சமிஞ்கைகள் ஏற்படலாம்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஃபோர்டிஸ் ஹார்ட் அண்ட் வாஸ்குலர் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் டி எஸ் கிளர் மாரடைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.

அப்போது, “மாரடைப்பு என்பது எச்சரிக்கை அறிகுறிகளுடன் வருவதில்லை. இந்தப் பிரச்னையை வயதானவர்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது அனுபவிக்க வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Advertisment

எனவே மார்பு வலி, இடது, வலது கை, தோள் பட்டை வலி என்ற அசௌகாரியத்தை நீங்கள் உணர்ந்தாலும், அது 20 நிமிடங்களுக்கு மேல் காணப்பட்டாலும் அலட்சியப்படுத்தாதீர்கள்.

இந்த விஷயத்தில் சுவாசத்திலும் கவனம் செலுத்துங்கள். மேலும் இந்த மாதிரி நேரங்களில், குமட்டல், சோர்வு, பதட்டம் மற்றும் விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பையும் உணரலாம்.

அந்த நேரத்தில் நிதானமாக இருங்கள் மற்றும் பீதி அடைய வேண்டாம். மேலும், ஆஸ்பிரின் மாத்திரையையும் (300 மி.கி.), க்ளோபிடோக்ரல் (300 மி.கி) மற்றும் அட்டோர்வாஸ்டாடின் (80 மி.கி) ஆகியவற்றை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

பிறகு அருகில் உள்ள மருத்துவமனைக்கு இ.சி.ஜி. பரிசோதனை செய்துக் கொள்ளலாம். இந்த மாத்திரைகள் அனைத்தும் பாதுகாப்பானவை மற்றும் அவசரகால பயன்பாட்டு சூழ்நிலையில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

அறிகுறி தோன்றிய 30 நிமிடங்களுக்குள் ஆஸ்பிரின் மென்று சாப்பிடுவது பிளேட்லெட் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் இரத்த உறைவு உருவாவதை தாமதப்படுத்துகிறது.

மேலும், மருந்துகளை மெல்லுவதன் மூலம், அது உங்கள் இரத்த ஓட்டத்தில் எளிதில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. சில நோயாளிகள் அதிக வியர்வை மற்றும் தலைச்சுற்றல் பற்றி புகார் கூறுகின்றனர்.

ஏனெனில் இதய நோய்க்கு பதிலாக இரத்த அழுத்தம் திடீரென வீழ்ச்சியடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது, நோயாளி சோர்பிட்ரேட்டை எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏனெனில் அது இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், படுத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாத்திரைகள் மூலம் நீங்கள் சமாளிக்கக்கூடிய நிலையில் இருந்தால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு உங்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கவும். உங்கள் அறிகுறிகள் லேசான மற்றும் நுட்பமானதாக இருந்தாலும் இதை புறக்கணிக்காதீர்கள். என்ன தவறு என்பதைக் கண்டறிய அடிப்படை ஈசிஜி எடுத்துக் கொள்ளுங்கள்.

எனவே அனைத்து முதியவர்களும் தங்களுடைய மகன்கள் மற்றும் மகள்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தொலைவில் இருந்தால், அருகில் இருக்கும் நண்பர்களின் எண்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், அச்சூழலில் அவசரகால மருந்துகளை உட்கொண்ட பிறகு நீங்கள் நன்றாக உணர்ந்தாலும், தனியாக வாகனம் ஓட்ட முயற்சிக்காதீர்கள்.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் முதுகு தரையில்படும்படி படுத்து, உங்கள் கால்களை மேலே உயர்த்தவும். இது உதரவிதானத்தைத் திறக்கிறது, சுவாசத்தை எளிதாக்குகிறது மற்றும் உங்கள் இரத்தத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. உங்கள் இதயத்தை ஆக்ஸிஜனேற்ற புதிய காற்றை ஆழமாக சுவாசிக்கவும்.

உங்கள் ஆரம்ப அறிகுறிகளின் முதல் மணி நேரத்திற்குள் உங்கள் மாரடைப்புக்கான சிகிச்சையைப் பெற வேண்டும். தாமதம் என்பது உங்கள் இதயம் சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய முடியாது மற்றும் வடு மற்றும் செல் இறப்புக்கு வழிவகுக்கும்.

சுருக்கப்பட்ட தமனியை சீக்கிரம் திறப்பதே இறுதி இலக்கு. ஆகையால் நிச்சயமாக, நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்தவுடன், மருத்துவர்கள் உங்களைக் கவனித்துக்கொள்வார்கள்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment