Advertisment

பொங்கல்னா ஒரே மாதிரிதான் இருக்கணுமா... கோதுமை ரவை- மிளகு காம்பினேஷன் தூள்!

Wheat Rava Pepper Pongal Recipe: சுவையும், ஆரோக்கியமும் கலந்த உணவாக இந்த கோதுமை ரவை மிளகு பொங்கல் அமையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பொங்கல்னா ஒரே மாதிரிதான் இருக்கணுமா... கோதுமை ரவை- மிளகு காம்பினேஷன் தூள்!

Wheat Rava Pepper Pongal Recipe

Wheat Rava Tamil News, Wheat Rava Pepper Pongal Recipes: கோதுமை இந்தியாவின் முக்கிய உணவுப் பொருள் என்பதை மறுப்பதற்கில்லை. தென் இந்தியர்களும் பூரி, சப்பாத்தி, புரோட்டா என கோதுமையை முடிந்த அளவு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு, கோதுமை அதி முக்கிய உணவாக இருக்கிறது.

Advertisment

எனவே கோதுமையில் விதவிதமான உணவுப் பொருட்களை செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் கோதுமை ரவை, மிளகு காம்பினேஷனில் பொங்கலை ருசி பார்த்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான செய்முறை:

Wheat Rava Pepper Pongal Recipes: கோதுமை ரவை மிளகு பொங்கல் செய்முறை:

கோதுமை ரவை மிளகுப் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - ஒரு கப், வேக வைத்த பாசிப் பருப்பு - கால் கப், மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) - அரை டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டேபிள் ஸ்பூன், நெய் - 4 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

இஞ்சி துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும். கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு சீரகம், மிளகு, இஞ்சி துருவல், மிளகாய், சீரகம், கறிவேப்பிலை போட்டு வறுத்து கோதுமை கலவையில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது கோதுமை ரவை மிளகு பொங்கல் ரெடி.

கோதுமை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு என்பது ஒருபக்கம் இருக்கட்டும். மிளகு இதுபோன்ற கொரோனா காலகட்டத்தில் அற்புதமான உணவு சேர்க்கை ஆகும். ஜலதோஷம், வயிற்றுப் பிரச்னை உள்ளிட்டவற்றை அண்டவிடாத தன்மை மிளகுக்கு உண்டு. எனவே சுவையும், ஆரோக்கியமும் கலந்த உணவாக இந்த கோதுமை ரவை மிளகு பொங்கல் அமையும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment