Advertisment

உங்க ரேஷன் கார்டு தர நிலை என்ன? இப்படி செக் பண்ணிக்கோங்க!

ரேஷன் கார்டுகள் குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உங்க ரேஷன் கார்டு தர நிலை என்ன? என்பதை இங்கே செக் பண்ணிக்கோங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
which standard your ration card, know your ration card benefits, ரேஷன் அட்டை, ரேசன் அட்டை, ரேஷன் கார்டு, ரேஷன் அட்டை, குடும்ப அட்டை, ரேஷன் கார்டு தரநிலை, தமிழ்நாடு, family card, PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC, ration card standards, which category your ration card, pds, tamil nadu ration card

Ration Card: தமிழ்நாட்டில் மக்கள் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளது. இந்த ரேஷன் கார்டுகள் குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உங்க ரேஷன் கார்டு தர நிலை என்ன? என்பதை இங்கே செக் செய்துகொள்ளுங்கள்.

Advertisment

தமிழ்நாடு அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளைக் கொண்டு ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கு ரேஷன் அட்டை மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. அதோடு, ரேஷன் அட்டையை முகவரி ஆவணமாகவும் பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டில் குடும்பமாக வசிக்கும் அனைவரும், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக குடும்ப அட்டைக்கு விண்ணபிக்கலாம். குடும்ப அட்டை பெறுவதற்கு தகுதி என்னவென்றால், விண்ணப்பிப்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவரின் பெயர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக் கூடாது.

ஸ்மார்ட் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்களை பெறுகிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசு கொரோனா நிவாரண நிதியை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்க உள்ளது. தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 நிதியுதவி திட்டம் PHH, PHH-AAY, NPHH 3 வகையான ரேஷன் அட்டைகளுக்கு மட்டும் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரேஷன் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த 5 வகையான குறியீடுகள் ரேஷன் அட்டைதாரர் எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பதை தெரிவிக்கின்றன. உங்களுடைய ரேஷன் அட்டையில் எந்த வகையான குறியீடு உள்ளது அந்த அட்டைக்கு ரேஷன் கடைகளில் என்ன பொருட்கள் வாங்கலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

  1. PHH: ரேஷன் அட்டையில் அட்டைதாரரின் புகைப்படத்துக்கு கீழே இந்த குறியீடுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் PHH என்று குறிப்பிட்டிருந்தால் இந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.
  2. PHH - AAY : ரேஷன் அட்டையில் PHH - AAY என்ற குறியீடு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
  3. NPHH: ரேசன் அட்டையில் NPHH என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த அட்டைதாரர் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
  4. NPHH-S: உங்கள் ரேஷன் கார்டில் NPHH-S என்ற குறியீடு இருந்தால் இந்த ரேஷன் அட்டைதாரர் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வங்கலாம். ஆனால், அரிசி மட்டும் கிடைக்காது. இந்த வகையான ரேஷன் அட்டையை மக்கள் சர்க்கரை அட்டை என்று சொல்கிறார்கள்.
  5. NPHH-NC: ரேசன் அட்டையில் NPHH-NC என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இந்த வகையான ரேஷ அட்டையை ஒரு அடையாள ஆவணமாகவும் முகவரிக்கான சான்றாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றபடி ரேஷன் கடைகளில் இருந்து எந்த பொருளும் வாங்க முடியாது.

இப்போது, உங்களுடைய ரேஷன் அட்டை எந்த வகையான ரேஷன் அட்டை என்பதையும் உங்கள் ரேஷன் அட்டைக்கு என்ன பொருட்கள் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொண்டீர்களா? உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ள இதை பகிர்ந்துகொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ration Card Tamil Lifestyle Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment