நிஜ வாழ்க்கை ஹீரோவில் இருந்து உருவாக்கப்பட்ட 2.0 வில்லன்...

அக்சய் குமாரின் இந்த கதாப்பாத்திரத்திற்கு வாழ்த்துகள் குவிகின்றன

2.0 வில்லன் பட்சிராஜன் : 2.0 நவம்பர் 29ம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

ரஜினியின் நடிப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் வில்லன் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் நடிகர் அக்‌ஷய் குமார். இந்த படத்தில் தொழில்நுட்பத்தால் அழிவிற்குள்ளாகும் பறவைகள் பற்றிய அதிக அக்கறை கொண்ட பறவைகள் ஆர்வலராக வலம் வருகிறார் அக்‌ஷய்.

2.0 வில்லன் பட்சிராஜன்

இந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததிற்காக அக்சய் குமாருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்ற நிலையில், யாரின் நிஜ வாழ்க்கையில் இருந்து அக்சய் குமார் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டது என்று ரசிகர்கள் தேடிக் கொண்டு வருகிறார்கள்.

2.0 வில்லன் பட்சிராஜன் – நிஜத்தில் ஹீரோ

உலகப் புகழ்பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் ஆராய்ச்சியாளர் சலீம் மொய்ஜூதீன் அப்துல் அலி அவரை அடிப்படையாகவே வைத்து பக்‌ஷி ராஜா கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பறவைகளின் வாழ்க்கை பற்றியும் பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் ஆராய்ச்சி செய்து கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டார் சலீம் அலி.

இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலீம் அலியின் நூல்கள் புகழ்பெற்ற படைப்புகள் ஆகும். சலீம் அலி 1987ம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார்.  பறவைகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்பவராகவும், பறவைகள் தொடர்ந்து அழிந்து வருவதை தாங்கிக் கொள்ளாத நல்ல மனம் கொண்டவராகவும் அக்சய் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க : 2.0 பிரம்மாண்டத்தை புழந்து தள்ளிய திரையுலகினர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close