Advertisment

வியர்வை நாற்றம் வருவது ஏன்? அசைவ சாப்பாடு காரணமா? உண்மை என்ன?

வேப்பிலையும் பயன்படுத்தலாம். வெளிபுற மருத்துவத்துக்கு கடலை மாவு, பாசிப்பருப்பு எடுத்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Why does sweat smell Is it due to non-vegetarian diet What is the truth

இந்த நாற்றம் உடலில் சுரக்கும் ஒரு வித சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது.

உடலில் வியர்வை நாற்றம் பலருக்கும் பெரும் பிரச்னையாக உள்ளது. அதுவும், கோடை காலத்தில் குளித்தாலும் வியர்வை சுரப்பு அதிகம் இருக்கும்.

இதனால், ஒரு வித துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இந்த நாற்றம் உடலில் சுரக்கும் ஒரு வித சுரப்பிகளில் இருந்து வெளிப்படுகிறது. அதாவது நமது உடலில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்கள் இதனை உருவாக்குகின்றன.

Advertisment

இதை தவிர்க்க முடியாதது என்ற போதிலும் இதனை எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம். அவை குறித்து தெரிந்து கொள்வோம்.

பொதுவாக பித்த உடம்பு காரங்களுக்கு காரம் உள்ளிட்டவை இயற்கையிலே பிடிக்கும். இவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளிக்கலாம்.

இல்லாவிட்டால் உடலில் உள்ள சூட்டை குறைக்க எண்ணெய் குளியல் எடுக்கலாம். மேலும், தக்காளி மற்றும் கோதுமை புல் ஜூஸ் குடிக்கலாம். இதில் முக்கியமான தயிரில் சிறிது மஞ்சள் கலந்து சாப்பிட்டு வரலாம். இதை தொடர்ந்து செய்யும்போது உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

அதேபோல் வேப்பிலையும் பயன்படுத்தலாம். வெளிபுற மருத்துவத்துக்கு கடலை மாவு, பாசிப்பருப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பொருளை அக்குள் உள்ளிட்ட இடங்களில் தேய்த்து வந்தாலும் கெட்ட மாற்றம் மாறும். மற்றபடி அசைவ உணவு காரணமாகாது. அதிகபடியான அசைவ உணவு எடுத்துக் கொள்ளும்போது தண்ணீர் குடிக்கலாம். இது உடம்புக்கு நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment