Advertisment

எடை இழப்புக்கு முழு கொழுப்பு பால் ஏன் ஆரோக்கியமான தேர்வாக இருக்கிறது?

முழு பால், குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது கொழுப்பு இல்லாத பால் ஆகியவை அவற்றின் கொழுப்பு உள்ளடக்கத்தின் அடிப்படையில், ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எடை இழப்புக்கு முழு கொழுப்பு பால் ஏன் ஆரோக்கியமான தேர்வாக இருக்கிறது?

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவரா அல்லது கடந்த காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சித்தவரா? ஆம் எனில், எடைக் குறைப்பு முயற்சியின் போது குறைந்த கொழுப்பு, அல்லது கொழுப்பு இல்லாத உணவுகளை உண்பது குறித்து சிலர் உங்களுக்கு பரிந்துரை செய்திருக்கலாம்.

Advertisment

இந்தியாவில் பெரும்பாலான எடை இழப்பு தொழில், தினசரி உணவில் கொழுப்பைத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது. பத்தாண்டுகள் பழமையான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள், கொழுப்பை உண்பதில் மக்கள் மனதில் ஒரு பயம் அல்லது தடையை உருவாக்கியது. இது கொட்டைகள், விதைகள், நெய், முழு கொழுப்பு பால் போன்ற அத்தியாவசிய, ஆரோக்கியமான கொழுப்புகள் உட்பட அதிக கொழுப்புள்ள உணவுகளை குறைக்க அல்லது அகற்ற வழிவகுத்தது.

இப்போதுள்ள மேம்பட்ட ஊட்டச்சத்து ஆய்வுகள், இந்த வழிகாட்டுதல்களுக்கு சவால் விடுத்துள்ளன. அதிகப்படியான கொழுப்பு உள்ளடக்கம் இருப்பதால், முழு கொழுப்புள்ள பாலைத் தவிர்க்குமாறு மக்கள் பல ஆண்டுகளாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

2021 இல் கூட, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association) போன்ற புகழ்பெற்ற சுகாதார அமைப்புகள், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது உடல் பருமனை தடுக்க உணவு வழிகாட்டுதல்களை உருவாக்கின. அவை, முழுக் கொழுப்பிற்குப் பதிலாக குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பால் பொருட்களை உட்கொள்ளுமாறு வற்புறுத்தியது. இருப்பினும், தற்போதைய சான்றுகள் இந்த வழிகாட்டுதல்களுடன் இணங்கவில்லை. பெரும்பாலான மக்கள் நம்புவது போல, கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது டோன் செய்யப்பட்ட பால் ஆரோக்கியமான தேர்வாக இருக்காது. மாறாக, முழு கொழுப்புள்ள பால் அதிக ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது.

ஊட்டச்சத்து விவரக்குறிப்பு:

முழு பால், குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது கொழுப்பு இல்லாத பால் ஆகியவை  அவற்றின் கொழுப்பு உள்ளடக்கத்தின் அடிப்படையில், ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. எடையின் அடிப்படையில், முழு கொழுப்புள்ள பாலில் 3.25 சதவிகிதம் கொழுப்பும், குறைந்த கொழுப்புள்ள பாலில் 1 சதவிகிதம் கொழுப்பும், கொழுப்பு இல்லாத பாலில் பூஜ்ஜுய கொழுப்பும் உள்ளது. அதிக கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக, முழு கொழுப்பு பால் அதிக கலோரிகளை வழங்குகிறது. இருப்பினும், அவை மற்ற இரண்டு வகைகளை விட அதிக வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் இந்த இடைவெளியை நிரப்ப குறைந்த கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத பாலை வைட்டமின் D உடன் பலப்படுத்துகின்றனர். இருப்பினும், ஒமேகா 3, இழப்பை ஈடுகட்ட எப்போதும் சேர்க்கப்படுவதில்லை. இது உகந்த மூளை மற்றும் இதய செயல்பாட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு அத்தியாவசிய கொழுப்பு ஆகும்.

மோசமான ஆரோக்கியமாக ஊகிக்கப்பட்ட முழு கொழுப்பு பால்!

1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மரபுசார் ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள், நிறைவான கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக முழு-கொழுப்பு பாலைத் தவிர்க்க அறிவுறுத்தியது, ஏனெனில் அதிக கொழுப்பு, கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதன் மூலம் இதய நோய்களை உருவாக்கும். ஆனால் இதை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. 21ல் ஆய்வுகளின் பகுப்பாய்வு, அதிக கொழுப்பு உட்கொள்வதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறிந்துள்ளன. உண்மையில், உணவுக் கொலஸ்ட்ராலை, இரத்தக் கொழுப்புடன் இணைக்கும் ஆதாரங்கள் மிகக் குறைவு.

எடை இழப்புக்கு முழு கொழுப்புள்ள பால் சிறந்தது:

பெரும்பாலான மக்கள் முழு கொழுப்புள்ள பாலைத் தவிர்க்கிறார்கள், பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகள் எடை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், ஆராய்ச்சி முடிவுகள் எதிர்மாறாக இருக்கிறது. ஒரு மதிப்பாய்வில், 16 ஆய்வுகளில் 11 ஆய்வுகள், உடல் பருமனின் குறைந்த ஆபத்துக்கும் முழு கொழுப்பு பால் நுகர்வுக்கும் இடையே நேர்மறையான தொடர்பைக் காட்டியது. சுமார் 18,400 பெண்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ஆய்வில், அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை அதிகமாக உட்கொள்வது குறைவான எடை அதிகரிப்புடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆண்களில் வயிற்றுப் பருமனின் அபாயத்தை 48 சதவிகிதம் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, அதேசமயம், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்பவர்களுக்கு வயிற்று உடல் பருமன் ஏற்படுவதற்கான ஆபத்து 53 சதவீதம் அதிகம். வயிற்றுப் பருமன் ஒட்டுமொத்த எடை அதிகரிப்பை விட மோசமானது மற்றும் இதய நோய்களால் இறப்பு ஆபத்துடன் அதிக தொடர்புடையது என்பதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முழு கொழுப்புள்ள பால் நல்லது.

ஏறக்குறைய 20,000 மாதவிடாய் நின்ற பெண்களை உள்ளடக்கிய ஒன்பது ஆண்டு கால ஆய்வில், ஒரு நாளைக்கு பால் உட்கொள்ளாத அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் உட்கொள்ளும் பெண்களை விட, ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முழு பால் உட்கொள்பவர்களிடையே எடை அதிகரிப்பதற்கான ஆபத்து 15 சதவீதம் குறைவாக இருப்பதாக ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முழு பால் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்தை குறைக்கிறது:

வளர்சிதை மாற்ற நோய் என்பது இன்சுலின் எதிர்ப்பு, உயர் ட்ரைகிளிசரைடு அளவு, பெருந்தமனி தடிப்பு, வயிற்றுப் பருமன் போன்ற பல ஆபத்து காரணிகளின் கலவையாகும், இது டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள் போன்ற நாள்பட்ட கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. முழு பால் ஆண்கள் மற்றும் பெண்களில் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 1,800 க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்திய ஒரு ஆய்வில், குறைந்த அளவு கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொண்டவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய் உருவாகும் வாய்ப்பு 59 சதவீதம் குறைவாக உள்ளது. முழு கொழுப்புள்ள பால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 44 சதவீதம் குறைக்கிறது.

பயனுள்ள எடை இழப்பு அல்லது சிறந்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்காக முழு கொழுப்புள்ள பாலை குறைக்க அறிவுறுத்திய பத்தாண்டுகள் பழமையான வழிகாட்டுதல்கள், திடமான அறிவியல் சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை. இந்த 'சாத்தியமில்லாத' வழிகாட்டுதல்கள் பல ஆண்டுகளாக எந்த விளக்கமும் மாற்றமும் இல்லாமல் பின்பற்றப்படுவது துரதிருஷ்டவசமானது. முழு கொழுப்புள்ள பால் பெரும்பாலான மக்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது மற்றும் எடையைக் குறைக்க அல்லது சிறந்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முழு கொழுப்புள்ள பாலை விட கொழுப்பு நீக்கப்பட்ட பாலை விரும்ப வேண்டிய அவசியமில்லை. திருத்தியமைக்கப்பட்ட உணவு முறையை திட்டமிட, ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment