Advertisment

உலக இதய தினம் 2017: இதய நோய்களிலிருந்து தப்பிக்க நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்

இந்தாண்டு worldheartday.org இணையத்தளமானது இதய நோய்களிலிருந்து நம் இதயத்தைக் காத்துக்கொள்ள 4 முக்கியமான பரிமாணங்களை உருவாக்கியுள்ளன. அவற்றை காண்போம்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
world heart day 2017, blood pressure,life style, food habit, obesity, cardio vascular diseases

நமது உடலுறுப்புகளில் எல்லா பாகங்களுமே முக்கியம்தான். ஆனால், இதயம் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு. இதய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும், அவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதய நோய்கள் தாக்காத வகையில் தற்காப்பு நடவடிக்கைகளையும், ஒழுங்கான வாழ்வியல் முறைகளையும் கடைபிடித்தாலே இதய நோய்கள் நம்மை நெருங்காது. இன்றைய நாளில் இதய நோய்கள் குறித்த அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

Advertisment

இருதய நோய்கள் என்றால் என்ன?

இதயத்தில் ரத்த திட்டுகள் இருத்தல், ரத்த நாளங்களில் கோளாறு, இதய வடிவமைப்பில் பிரச்சனைகள், பக்கவாதம், பிறவியிலிருந்து இருக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், இதய தமனி நோய், இதய அடைப்பு நோய் உள்ளிட்ட அனைத்துமே இருதய நோய்களில் அடங்கும். ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகள், உடல் பருமன், புகைபிடித்தல், அளவுக்கதிகமான குளுக்கோஸ், தீய கொழுப்புகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுகின்றன.

இந்தாண்டு worldheartday.org இணையத்தளமானது இதய நோய்களிலிருந்து நம் இதயத்தைக் காத்துக்கொள்ள 4 முக்கியமான பரிமாணங்களை உருவாக்கியுள்ளன. அவற்றை காண்போம்.

1. உங்கள் இதயத்தை அறிந்துகொள்ளுங்கள்:

உங்கள் இதயத்தை முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், உங்களுக்கு வரவிருக்கும் இதய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சீரான கால அளவில் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்தல் மூலம் இதய நோய்களிலிருந்து முன்கூட்டியே தப்பித்துக் கொள்ளலாம்.

2. இதயத்திற்கு சரியான உணவை அளியுங்கள்:

ஆரோக்கியமான உணவை உண்பது முக்கியமான விஷயம். ஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ், இதுதவிர ஆரோக்கியமான உடல்நலத்திற்காக உங்களால் நுகர முடிந்த உணவுப்பொருட்களை உண்ணலாம்.

3. இதயத்தை ஆக்டிவாக வைத்திருங்கள்:

வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்வது முக்கியம். உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருங்கள்.

4. உங்கள் இதயத்தை காதலியுங்கள்:

துரித உணவுகள், ஒழுங்கற்ற வேலை நேரம் இவற்றை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்பது, புகை பிடித்தலை தவிர்ப்பது, மது பழக்கத்தை நிறுத்துவது உள்ளிட்டவற்றால் இதயம் நன்றாக செயல்படும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment